செவ்வாய், செப்டம்பர் 27, 2005

அம்மா



அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடு பட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறுவைப்பாள்

எமைக்காக்க இரவில் விழித்திருப்பாள்!

எமக்காகவே உழைத்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன்வயிறு தகித்திருந்து எம்வயிறு குளிர

தன்வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!

தன் உணவுசேர்த்து எம்வட்டிலில் போட்டு

நாம் உண்ணும் அழகு கண்டு மனம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை

அவள்தான் நான் கண்ட முதல் தெய்வம்.

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us