புதிதாய் இன்று பிறந்தாய்!
பூமியில் வாழும் மனிதர் நமக்கு
புதிதாய் என்ன கொண்டு வந்தாய்!
புழுதியில் வாழும் எமக்கு
புனிதம் கொண்டு வருவாயோ!
துன்பம் நித்தம் சுமந்த எமக்கு
இன்பம் கொண்டு வருவாயோ!
அடிமை வாழ்வை உடைத்து
விடுதலை கொண்டு வருவாயோ!
நித்தம் நித்தம் செத்து மடிந்தவர் வாழ்வில்
நிம்மதி கொண்டுவா! நிம்மதி கொண்டு வா.