கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள், 20 பிரதி அமைச்சர்கள், 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும்.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும், ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்கும் குறைவான அமைச்சர்களுமே உள்ளனர்.
இந்த வாரம் உலக கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு சிறீலங்காவில் உள்ள உலகில் மிகப்பெரிய அமைச்சரவை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதப்போவதுடன் அது கின்னஸ் சாதனையில் இடம்பெற பரிந்துரை செய்யப்போவதாகவும் ஐ.தே.காவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி:-புதினம்.