ஞாயிறு, அக்டோபர் 09, 2005

இழப்பு


கடற்கரை ஓரத்தில்
கற்பாறையில் கடல் அடித்திருக்கும்!
நெஞ்சின் ஓரத்திலே
உன்நினைவுகளை இதயம் சுமந்திருக்கும்!
சில்லிடும் கடற்காற்றில்
நான் காத்திருந்தேன்!
நீ என்னை கடந்து செல்கையில்
என் கண்களைப் பார்த்திருந்தாய்!
என்னை கண்டவுடன்
மலரும் உன் முகமென்ன!
ஆனந்தத்தில் தாவி ஓடும்
உன் நடை என்ன!
உன்னிடத்தில் எனக்கோ மயக்கம்
ஆயினும் பேச தயக்கம்!
பேசாத என்னைக்கண்டு உனக்கு கோபம்
ஆயினும் என்னைக்கண்டு நாணம்!
காலம் என்னை உன்னிடத்தில்
இருந்து பிரித்துவிட்டது!
நீயோ உன் நெஞ்சில் இருந்து
என்னை தூக்கி எறிந்து விட்டாய்!
காதலை வெளிப்படுத்தத் தெரியாத எனக்கு
இப்பேரிடி தேவையான ஒன்றுதான்.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us