-நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம்
தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சிரேஷ்ட நடிகை மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், அப்பாஸ் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இவர்களில் சரத்குமாரும், எஸ்.எஸ். சந்திரனுடன் நடிப்புத் தொழிலுடன் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்களாகும்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு பூராகவும் நட்சத்திர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் நட்சத்திரங்கள் வீதிக்கு இறங்கி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை கண்டித்து பேரணிகளை நடத்தும் போது 1983 இன் நிலைமைக்கு விரைவில் தமிழகம் வந்துவிடுமெனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை சந்தித்திருக்கிறார்.
http://www.thinakkural.com/news%5C2007%5C2...s_page21120.htm