
மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.
மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.
'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.
இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்
-தற்ஸ் தமிழ் இல் இருந்து......