
இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
"ஆணிவேர்"
இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.
இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்கிறது. முழுக்க முழுக்க இலங்கை தமிழ் பகுதி களில் உருவான இந்த படத்துக்கு, "ஆணிவேர்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
கதையின் நாயகனாக நந்தாவும், நாயகியாக மதுவிதாவும் நடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை தமிழ் டாக்டராக நந்தாவும், இந்தியாவை சேர்ந்த பத்திரிகை நிருபராக மதுமிதாவும் வருகிறார்கள்.
கதை
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மதுமிதா தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க, யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். அங்கு கடமையே கண்ணாக தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார டாக்டர் நந்தாவை சந்திக்கிறார். நட்பு கொள்கிறார். போரினால் மக்கள் படும் அவலங்கள், மதுமிதாவையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறார்.
வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு, நந்தாவையும், மதுமிதாவையும் பிரித்து விடுகிறது. மதுமிதா, தமிழ்நாட்டு க்கு திரும்புகிறார். சில வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் இலங்கைக்கு செல்கிறார். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், நந்த ‘வை தேடி அலைகிறார். இருவரும் இணைந்தார்களா, இல்லையா? என்பதை படத்தின் முடிவு விளக்குகிறது.
ஜான் மகேந்திரன்
"உதிரிப்பூக்கள்", "நெஞ்சத்தை கிள்ளாதே" ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.
"ஆணிவேர்" படம், சென்னையில் பத்திரிகை நிருபர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படம் முடிந்ததும், டைரக்டர் ஜான் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"இலங்கை தமிழர்களின் அவலங்களை விளக்கும் "ஆணிவேர்" படத்தின் படப்பிடிப்புக்கு, ஒரே ஒரு காமிரா மட்டுமே பயன்ப டுத்தப்பட்டது. வேறு எந்த உபகரணமும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க தமிழர்களின் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு நடந்தது. யுத்தத்தில் கை-கால்களை இழந்தவர்கள் கூட, படப்பிடிப்பில் கலந்துகொண்டு வேலை செய்தார்கள்.
வெளிநாடுகளில்...
இந்த படம் லண்டன் (London), கனடா (Canada), சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற வெளிநாடுகளில் திரையிடப்பட்டு, வெ ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, "ஆணிவேர்" படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறோம். தணிக்கை குழு அனுமதிக்குமா, அனுமதிக்காதா? என்று தெரியவில்லை. அப்படியே அனுமதித்தால், இந்த படம் எடுத்ததின் பலனை நாங்கள் அடைவோம்.'' இவ்வாறு டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறினார்.
-நன்றி தமிழ்ப்பிரியம்.