வியாழன், மார்ச் 27, 2008
பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு சரமாரியாக அடி உதை!!!
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.
இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.
கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.
லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.
இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/03...-sinhalese.html
குமுதம்.காம் முச்சந்தி.:
சிங்கள சினிமா பட டைரக்டருக்கு தமிழ்நாட்டில் விழுந்த அடி-_உதை
''இலங்கையில இருக்குற சிங்களத்து சினிமா டைரக்டரு ஒருத்தர் 'பிரபாகரன்'னு படம் எடுத்திருக்காரு. முழுக்க முழுக்க தமிழ் போராளிகள் இயக்கத்த அதாவது புலிகளை சர்வதேச அளவில் கொச்சை படுத்துறவிதமான படமாம் அது. சிங்கள அரசே அந்த டைரக்டருக்கு பக்கபலமா இருந்து உதவிபன்னறாம். அப்படிப்பட்ட சினிமா படத்தை எடுத்துகிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாரு அந்த டைரக்டர். கே.கே. நகர்ல இருக்குற ஜெமினி கலர் லேபில் வச்சு 'தமிழ் டப்பிங்' வேலைய செய்யுறதோட அறுபதுக்கும் மேற்பட்ட படக்காப்பி (ப்ரிண்ட்) போடுற திட்டத்திலேயும் இறங்கியிருந்தாரு.
ரகசியமா நடந்துகிட்டிருக்கிற இந்த படவேலை பத்தின தகவல் எப்படியோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்போட ஊடக பிரிவு பொருப்பாளரான வன்னி அரசுக்கு தெரிஞ்சிருக்கு. புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி பன்னாற்று கைதாகி ஜாமீன்ல வந்தாரே அதே 'வன்னி'தான் உடனே சுப. வீரபாண்டியன். சினிமா இயக்குனர் சீமான். உள்ளிட்ட பலருக்கும் தகவல் பரவிடுச்சு. அப்புறம் என்னது. திபுதிபுன்னு ஒரு ஆயிரம் தமிழ் பற்றாளர்களோட சுபவீ. சீமான், வன்னியரசு உட்பட பெரிய டீமே 'ஜெமினி' கலர் லேடிபுக்கு போயிருக்கு.
அந்த சிங்கள டைரக்டர்கிட்ட 'எங்க இனத்துக்கு எதிரா படம் எடுத்துட்டு, எங்க மண்ணுலேயே வந்து இந்த வேலைய செய்ய எப்படி துணிச்சல் வந்துச்சுன்னு ஓட ஓட விரட்டி தர்ம அடியா போட்டு தாக்கிட்டாங்க. சிங்கள டைரக்டரோட சட்டதுணி எல்லாம் கிழிஞ்சுடுச்சு. அவரு உயிர் பயத்துல 'அய்யோ, அய்யோ'ங்கிறத மட்டுமே தமிழ்ல கத்தினப் பாத்து, போனாப் போகுதுன்னு 'அடி'ய விட்டுட்டு அவரை தூக்கிட்டு வந்து ஒரு சேர்ல குந்தவச்சு முகத்துல தண்ணியடிச்சு கழுவிட்டு 'இந்த மாதிரி இனிமே செய்வியாடான்னு' திரும்பவும் ரெண்டு தட்டு தட்டியிருக்காங்க. அய்யோ சாமிங்கள சிலோன்லதான் 'புலிகள்' இருக்கான்னு நினைச்சேன் இங்கேயும் இருப்பீங்கன்னு தெரியாது நான் உங்க கேப்டன் பிரபாகரனுக்கு எதிராவோ, தமிழர்களுக்கு எதிராவோ படம் எடுக்கவே போராளி குழுவுல ஒரு சின்ன பையனா வர்றவருக்குதான் 'பிரபாகரன்'னு பேரு அதையே படத்துக்கு பேரா வச்சுட்டேன். மத்தபடி ஒரு தப்பும் செய்யலேன்னு கதறி அழுதிருக்காரு.
இதுக்குள்ள நிறைய போலீஸ் உள்ள வந்துருச்சு. அவரை மீட்டு பாதுகாப்பா ஒரு அறைக்கு கொண்டு போய் வச்சாங்க. நம்ப 'டீம்' விடவில்லை. பதில் சொல்லுடான்னு அங்கேயும் போய் வம்படிச்சாங்க. பிறவு போலீஸ் மத்தியில வச்சுகிட்டு சுப.வீ. அந்த சிங்கள டைரக்டர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.
இறுதியா தமிழ் தலைவர்களான பழ. நெடுமாறன், டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பலரை கூட்டி வச்சு அந்த 'பிரபாகரன்' படத்தை 27_ந் தேதி காலையில பதினோரு மணிக்கு போட்டு காட்டணும். போராளிகளுக்கோ தமிழர்களுக்கு படம் எதிரா இருந்தா தமிழ் டப்பிங், பிரிண்ட் போடுற எந்த வேலையும் செய்யக் கூடாது (அப்படி செய்தா படச்சுருளையே கொலுத்திடுவோம்னு வேற சொன்னாங்க). அப்படியே அந்த பெட்டிய தூக்கிட்டு அடிபடாம சிங்களத்துக்கு ஓடிப்போயிடனும். அனுமதி கிடையாது. நல்லபடியா இருந்துச்சுன்னா நீ செய்யுற வேலைய தாராளமா செய்துக்கிடலாம்னு'' அந்த டைரக்டர் கைப்பட எழுதி வாங்கிட்டு, அந்த 'பிரபாகரன்' சிங்களபடத்தை ஒரு வெட்டுக்குள்ள போட்டு மூடி சில வச்சுட்டுத்தான் வெளிய வந்தாங்க.''
அடடே அப்புறம் என்னாச்சு _ அன்வர்பாய்.
''அதான் முதலிலேயே உதைச்சுட்டுங்களே. பிறவு ஏதும் நடக்கலை. சமாதானமா வெளியேறிட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அந்த சிங்கள டைரக்டர் சட்டை துணி எல்லாம் கிழிஞ்சி கிடந்தாரில்ல. அத பாத்துட்டு தமிழ் உணர்வாளர்கள் பாவப்பட்டு, உடனே பக்கத்துல இருந்த துணிக் கடைக்கு ஓடி டைரக்டரோட சைஸுக்கு ஒரு டி.சர்ட் வாங்கி வந்து போட்டுக்க வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா, போலீஸ், பத்திரிக்கைக்காரங்கன்னு வந்து பார்க்குறப்போ, சட்டைகிழிந்து பரிதாபமா இருந்தா நல்லாருக்காது இல்ல அதான்'' என்றார் சிரித்தபடியே.
சபை களைகட்டும்.
ஒட்டுக் கேட்டவர் :
பா. ஏகலைவன்
குமுதம்.காம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us