ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.
நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.
இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரனுக்கு உறுதி கூறினார்
தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்.
http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH3b02nLW3e
அர்ஜுனின் மறுப்பு அறிக்கை.
இலங்கைத்தமிழ் மக்களுக்கு என்றும் என்னுடைய ஆதரவு இருக்கும்: அர்ஜுன்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர் என செய்தி வெளிவந்திருந்தது.
எனினும் அந்த செய்தியடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கொந்தளிப்பையடுத்தே இன்று அஜித் உனடியாக சில செய்தியூடகங்களுக்கு தான் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொள்வேன் என்ற தகவலை வழங்கியிருந்தார்.
அதே நேரம் அர்ஜுன் தமிழ்வின் இணையத்தளத்தை நேரடியாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த 23 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் தமிழை மிகவும் நேசிப்பதாகவும் இப்படிபட்ட கருத்தை தான் மனதில் கூட நினைந்தது கிடையாது என்றும் குறிப்பாக இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் நேற்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தில் வந்த கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி : தமிழ்வின்