வியாழன், மார்ச் 13, 2008

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.

Source: http://english.pravda.ru/science/mysteries/104375-0/
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us