செவ்வாய், ஜூன் 05, 2007

கழிப்பறையில் பாரதி படம்:


திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர்.

சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன.

அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர்.

இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக.

பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை.

தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள்.

உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2007/06...harathiyar.html

சேது சமுத்திர திட்டத்தால் புலிகளுக்குதான் இலாபமாம், கைதி காஞ்சி காம கோடி!!!

``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும்.

அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும்.
இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல்களுக்கு ஒருமுறை ஆகும் செலவு (மாலுமிகள் சம்பளம், எரிபொருள், கப்பல் தேய்மானம் போன்றவை உள்பட) ரூ.3,50,000 தான்.

இன்று இந்தியத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிற்கும் மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை, வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட (அதிகபட்சம்) 20,000. இவற்றில் 16,000 கப்பல்கள் நமது நாட்டின் தென்பகுதியைக் கடப்பதில்லை.
சேது சமுத்திரம் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட பிறகும் 25,000 டன் எடைக்கு (னுறுகூ) மேலுள்ள கப்பல்களால் கால் வாயை கடக்க முடியாது. காரணம், அவற்றுக்கு தேவைப்படும் அளவுக்கு கால்வாயை ஆழப்படுத்த முடியாது. கால்வாய் முடிக்கப்படும் தருவாயில் உலகிலுள்ள பெரும்பாலான கப்பல்களின் எடை 30,000 டன்னைத் தாண்டிவிடும். இதற்கு எரிபொருளின் விலை உயர்வும் முக்கிய காரணமாகும்.

25,000 டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே பத்து வருடம் கழித்தும் புழக்கத்தில் இருந்தாலும், அவை சேது சமுத்திரம் கால்வாய் வழியாகவே செல்லவேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்குப் பதிலாக இலங்கையைச் சுற்றிச் சென்றால் லாபம்தான். கொழும்பு துறைமுகத்தில் சலுகைகள் அதிகம். இந்தக் கால்வாய்த் திட்டத்தினால், மணலை அள்ளி எடுக்கும் காண்ட்ராக்டர்களைத் தவிர லாபம் அடையக் கூடிய ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தான். ஏற்கெனவே அந்த இயக்கம் ரகசியமாக இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. இனி சிறிய கப்பல்களையும் வாங்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த ஒரு இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இத்திட்டத்தினால் இல்லை.’’

காஞ்சி காமகோடி மடத்தின் `காமகோடி இதழாகும் (ஜூன் 2007).
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us