``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும்.
அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும்.
இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல்களுக்கு ஒருமுறை ஆகும் செலவு (மாலுமிகள் சம்பளம், எரிபொருள், கப்பல் தேய்மானம் போன்றவை உள்பட) ரூ.3,50,000 தான்.
இன்று இந்தியத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிற்கும் மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை, வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட (அதிகபட்சம்) 20,000. இவற்றில் 16,000 கப்பல்கள் நமது நாட்டின் தென்பகுதியைக் கடப்பதில்லை.
சேது சமுத்திரம் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட பிறகும் 25,000 டன் எடைக்கு (னுறுகூ) மேலுள்ள கப்பல்களால் கால் வாயை கடக்க முடியாது. காரணம், அவற்றுக்கு தேவைப்படும் அளவுக்கு கால்வாயை ஆழப்படுத்த முடியாது. கால்வாய் முடிக்கப்படும் தருவாயில் உலகிலுள்ள பெரும்பாலான கப்பல்களின் எடை 30,000 டன்னைத் தாண்டிவிடும். இதற்கு எரிபொருளின் விலை உயர்வும் முக்கிய காரணமாகும்.
25,000 டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே பத்து வருடம் கழித்தும் புழக்கத்தில் இருந்தாலும், அவை சேது சமுத்திரம் கால்வாய் வழியாகவே செல்லவேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்குப் பதிலாக இலங்கையைச் சுற்றிச் சென்றால் லாபம்தான். கொழும்பு துறைமுகத்தில் சலுகைகள் அதிகம். இந்தக் கால்வாய்த் திட்டத்தினால், மணலை அள்ளி எடுக்கும் காண்ட்ராக்டர்களைத் தவிர லாபம் அடையக் கூடிய ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தான். ஏற்கெனவே அந்த இயக்கம் ரகசியமாக இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. இனி சிறிய கப்பல்களையும் வாங்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த ஒரு இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இத்திட்டத்தினால் இல்லை.’’
காஞ்சி காமகோடி மடத்தின் `காமகோடி இதழாகும் (ஜூன் 2007).
8 கருத்துகள்:
சரியாக கணித்து சொல்லியிருக்கிறார் ஆச்சாரியார். சேது சமுத்திர திட்டத்தால் நாட்டுக்கு நஷ்டம். தேவையில்லாமல் ராமபகவான் உருவாக்கிய பாலத்தையும் அழிக்க நினைக்கிறார்கள்.
//தேவையில்லாமல் ராமபகவான் உருவாக்கிய பாலத்தையும் அழிக்க நினைக்கிறார்கள்.\\
ராமபகவான் பாலத்தை உருவாக்கும்போது
நம்ம உண்மைத் தமிழன் செங்கல்லு எடுத்துக் கொடுத்தாரா?
//ராமபகவான் பாலத்தை உருவாக்கும்போது
நம்ம உண்மைத் தமிழன் செங்கல்லு எடுத்துக் கொடுத்தாரா?//
நான் எடுத்து கொடுக்கவில்லை. அணில் எடுத்து கொடுத்ததாக இராமாயணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ராமர் பாலம்கட்டியதற்கான அலுவல் முடிந்துதானே விட்டது அதை இடிப்பதில் தவறேதும் இல்லையே
ராமபகவான் பாலத்தை உருவாக்கும்போது
நம்ம உண்மைத் தமிழன் செங்கல்லு எடுத்துக் கொடுத்தாரா
உங்கள் கருத்தை வரவேக்கிறேன்
சங்கராமன் ஆவி.
Actually, the paper is very correct. When we get tamil eelam we can attract ships to our harbors and we can offer them the passage at low price.
எச்யூஸ்மி,
ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
கோடி இல்லை கேடி.
ஒரு சந்தேகம், புலிகளிடம்தான் ஏற்கனவே பல கப்பல்கள் உள்ள கப்பற்படை இருக்குதே, என்னமோ புதுசா வரப்போற மாதிரி சொல்றாங்க...
கருத்துரையிடுக