சனி, ஜூன் 02, 2007

இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பம்.

டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது


ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்பைடர்மேன்-3 இதுவரை இந்தியாவில் 57 கோடிகள் வசூலித்துள்ளது. இது டைட்டானிக் திரைப்படத்தின் இந்திய வசூலை (55.5 கோடிகள்) விட அதிகம். இன்னும் இப்படம் சில கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெகா வசூல் காரணமாக ஹாலிவுட் சினிமாவின் டாப்-10 மார்க்கெட் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிமாவின் ஆக்டபஸ் கரங்கள் இந்திய சினிமா வர்த்தகத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதற்கான அறிகுறியே ஸ்பைடர்மேன்-3யின் இந்த வெற்றி.

கோக், பெப்ஸியின் வருகை உள்ளூர் காளிமார்க், கடாமார்க்களை விழுங்கியதுபோல் சினிமாவிலும் நிகழுமா? அவசரமாக அலசப்பட வேண்டிய பிரச்சனை இது!
cinesouth.com

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

பெயரில்லா சொன்னது…

இதற்கு காரணம் "bollywood" என்ற ஹிந்திகாரர்களின் மெத்தனம் மற்றும் அலட்சியம் தான். ஹிந்தி ஒன்றுதான் மொழியென்றும், அதில் எடுக்கப்படும் படங்கள்தான் திரைப்படம் போலவும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். என்னைக் கேட்டால், தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்கள், ஹிந்தி திரைப்படங்களை விட சிறந்ததாக இருக்கின்றன. இதனால்தான், இதைப் பயன்படுத்திக் கொண்டு ஹாலிவுட் உள்ளே வர பார்க்கின்றது

ILA(a)இளா சொன்னது…

//ஹிந்தி ஒன்றுதான் மொழியென்றும், அதில் எடுக்கப்படும் படங்கள்தான் திரைப்படம் போலவும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். என்னைக் கேட்டால், தமிழ்,தெலுங்கு, மலையாளப் படங்கள், ஹிந்தி திரைப்படங்களை விட சிறந்ததாக இருக்கின்றன.//

சத்தியமான உண்மை- இது மமுட்டி தெளிவா NDTVல சொன்ன போது, வடகத்திய மக்கள் பொருமனது நமக்கே தெரியுமே. தமிழர்கள்/தென்னிந்திய சினிமாக்கள் எல்லாமே சிறுபான்மையினர் படம்னு நம்புற காலங்க இது

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us