

உலகத் தொழிநுட்ப வளர்ச்சியில் இன்னுமொரு கண்டுபிடிப்பு உலகின் முன் விரிந்துள்ளது. 2011ம் ஆண்டு மூன்று சக்கரங்களுடன் பறக்கும் மகிழுந்து விற்பனைக்கு வருகின்றது. நெதர்லாந்தைச் சேர்ந்த திரு.ஜோன் பாக்கர் அவர்களின் கண்டுபிடிப்பில் PAL -V (Personal Air and Vahile) இவ் மகிழுந்து உருவாக்கப்படவுள்ளது.
இவ் மகிழுந்து 1.20 மீற்றர் அகலம் கொண்டதாகவும் 750 கிலோ எடையுள்ளதாகவும் அமையவிருக்கின்றது. இவ் வாகனத்தை வீதியில் ஓட்டிச்செல்லும் போது 100 கிலோ மீற்றருக்கு 3 லீற்றர் எரிபொருள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
பறக்கும் போது கிட்டத்தட்ட 9 லீற்றர் எரிபொருளும் தேவைப்படுகிறது. இவ் வருடத்திலேய இக் கண்டுபிடிப்பு முழுமைப்படுத்தப்பட்டு 2011 ம் ஆண்டு கிட்டத்தட்ட 100.000,00 யூரோ விலை மதிப்புடன் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:-பதிவு.