செவ்வாய், செப்டம்பர் 27, 2005

அம்மா



அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடு பட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறுவைப்பாள்

எமைக்காக்க இரவில் விழித்திருப்பாள்!

எமக்காகவே உழைத்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன்வயிறு தகித்திருந்து எம்வயிறு குளிர

தன்வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!

தன் உணவுசேர்த்து எம்வட்டிலில் போட்டு

நாம் உண்ணும் அழகு கண்டு மனம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை

அவள்தான் நான் கண்ட முதல் தெய்வம்.

வெளிநாடு

வெளி நாடு வந்து விட்டால்
பல நோடு உழைத்திடலாமென்பர்!
ஒரு நோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கிறோம் இன்று!
பலனேதும் இல்லாது பலமோடு
பார்த்திருப்போம் பல காலம்!
வருடம் ஒன்றாகியும் வேலை இல்லை
நிரந்திரமான விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை
எம் வாழ்வில் இல்லை என்று!
இறுமாந்திருந்த எமக்கு
வாழ்வே இல்லை.

மது

பட்டையே உனக்கு பிடித்த சரக்கு
அது உன் கழுத்துக்கு சுருக்கு!
குடிப்பதால் உனக்கு மட்டும் இன்பம்
உன்கூட இருப்பவர்களுக்கு துன்பம்!
குடித்தபின் உனக்கு வெறி
அதற்க்கு தொட்டுக்கொள்ள வேண்டும் கறி!
குடியரக்கன் குறித்துவிட்டான் தேதி
உனக்கு தெரியுமா இச்சேதி!
குடிப்பவர்களே அதனை நிறுத்து
இல்லையெனில் கால்களை போடுவேன் முறித்து!
உனது அழகு எங்கோடிப்போனது
இன்னமும் வேண்டுமா உனக்கு அது!
நடுரோட்டில் நீ வீழ்ந்துகிடந்தால் அவமானம்
இதற்க்கு மேலும் உனக்கு இருக்குதோ மானம்!
வருங்கால குடிமகனே கேள்
உனது சந்ததி அழிவதைப் பார்!
போதும் உனக்கு கள்ளச்சாராயம்
செய்து அலுத்து விட்டேன் பிரச்சாரம்.

தம்

தம்மு அடித்துவிட்டால் வந்துவிடும் கிக்கு
அதனுடன் கொசுறாக கிடைத்துவிடும் பக்கு பக்கு!
சிகரட்பிடிப்பதை நாகரீகம் என்கிறாய்
இதற்காக பின்னால் தொங்குகிறாய்!
உள்ளிழுத்து வெளி விட்டாய் புகை
அதுவே உன் நுரையீரலுக்கு பகை!
பில்ரர் உள்ளது அடித்தால் பாதுகாப்பு என்பாய்
பின்னர் பில்ரரையே தம்மாக அடிப்பாய்!
வளையம் வளையமாக விடுவதில் நீ குரு
இதனால் மாறுவது உன் உரு!
ஆப்பிள் போன்ற உன் கன்னம்
பின்னர் ஆஸ்ரேயாகிப்போன கிண்ணம்!
உனக்கு பிடித்த சிகரட் பில்ரர் கோல்ட்
அது உன் வாழ்வுடன் விளையாடும் பிளேயர்!
உனக்கு செயின்சிமோக்கர் என்று பெருமை
அதுவே உன் மடமை!
சிகரட் பிடிப்பதை நீ நிறுத்தாட்டி
உன்னை பிடித்து விடும் நிக்கட்டின்!
நண்பர் மத்தியில் நீ புகை மன்னன்
உனது குடும்பமே இதனால் புகையுது கண்ணா!
புகை உனக்கு பகை
இதை கூறுபவர்கள் உங்களுக்கு என்றுமே பகை.

நுரை

கடல் தள்ளும் நுரை கூட
உன் கால் கண்டவுடன்
கரைந்து போனதென்ன.

குளிர்


குளிர்ந்த காற்று கூட
உனைக்கண்டதும் குளிர்ந்து
பனியாய் படர்வதென்ன.

செவ்வந்திப்பூ

செவ்வந்திப்பூ என்று நான் இருந்தேன்
சென்று தொட்டுப்பார்த்தபோதுதான்
தெரிந்தது அவள் பூவல்ல செந்தீ என்று.

வணக்கம்


பிருந்தனின் பக்கம்
உங்களை அன்புடன்
வரவேற்கிறது.

கவிதைகள்

புகைப்படங்கள்

ஓவியங்கள்

காவியங்கள்

துனுக்குகள்

நகைச்சுவை

கட்டுரை

கதைகள்

அறிவியல்

செய்திகள்

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us