வியாழன், ஜூலை 13, 2006

ஸிடேனை ஆத்திரமூட்டியதாக ஒப்புக்கொண்டார் மேட்டராசி.




உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் ஸினடின் ஸிடேனை அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான் என்று இத்தாலி வீரர் மேட்டராசி ஒப்புக்கொண்டுள்ளார்.

இறுதி ஆட்டத்தின் போது மேட்டராசியின் மார்பின் மீது ஸிடேன் தலையால் முட்டிய சம்பவம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செயலுக்காக ஸிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஸிடேனை ஆத்திரப்படுத்தும் வகையில் தீவிரவாதி என்று திட்டியதாகவும் அவரது தாய் குறித்து இழிவாக பேசியதாகவும் செய்தி வெளியானது. இதை மேட்டராசி மறுத்துள்ளார்.

இது குறித்து இத்தாலி பத்திரிகைக்கு அவர் தெரிவித்ததாவது:

ஸிடேனை நான் அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான். தீவிரவாதி என்றோ அவரது தாயை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் கூறவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரே தீவிரவாதி எனது 10 மாத செல்ல மகள்தான். ஸிடேனின் தாய் பற்றியும் எதுவும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை தாய் என்பவர் தெய்வத்தை போன்றவராவார்.

நான் அவரது சட்டையை சிறிது நேரம் பிடித்திருந்தேன். படுகோபமாக திரும்பிய அவர், உனக்கு உண்மையிலேயே இந்த சட்டை வேண்டுமென்றால் பிறகு தருகிறேன் என்றார். நானும் பதிலுக்கு அவமானப்படுத்தும் வகையில் வார்த்தைகளைக் கூறினேன் என்றார்.

ஸிடேன் மேட்டராசி மோதல் சம்பவத்தின் போது பதிவாகியுள்ள காட்சியில் இருவரின் வாயசைப்பை வைத்து என்ன பேசினார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் செய்தி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒருவரின் வாயசைப்பை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்கும் பிரபல "லிப் ரீடர்' ஜெவ் சிகா என்பவரை இதற்காக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதன்மூலம் அவர் அப்படியே உச்சரிக்க, இத்தாலி மொழி பெயர்ப்பாளர் அதன் அர்த்தம் என்னவென்பதை தெரிவித்துள்ளார்.



"நீ ஒரு தீவிரவாதி மகன்' என்று மேட்டராசி திட்டியதாக இந்த முயற்சியில் தெரியவந்து. மற்றொரு குழுவினர் நடத்திய ஆய்வில் "நீ ஒரு பொய்யன். உனக்கும் உனது குடும்பத்துக்கு அசிங்கமான இரவுதான்' என்பது உட்பட தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸிடேன் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார் என்று அவரது இணைப்பாளர் அலயன் கூறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பாக மார்கோ மேட்டராசியின் தந்தை கிஸிபி மேட்டராசி பி.பி.சி. க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மகன் அப்பாவி. இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவனே அவன்தான். இறுதி ஆட்டம் முடிந்ததும் எனது மகனுடன் பேசினேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசினான். அவனை சீண்டியதாக கூறினான். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஏதோ பகைமை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்த அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சோதனைகள்தான். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவன் காயங்களுடன் திரும்பி வருவதே இதற்கு சாட்சி. சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை. அதேசமயம் யாரையும் பலிகடா ஆக்குவதை விரும்பாமல் இதை கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஒழுங்கு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சர்வதேச போட்டிகளில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படும் போது அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கமாக விசாரணை நடத்தப்படும். தவறு செய்த வீரரை கண்டறிந்து தண்டனை வழங்கப்படும். இதேபோன்று ஸிடேனின் நடத்தை குறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. இவர் மேட்டராசி நெஞ்சில் முட்டிய போது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணி பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மேட்டராசி மீது விசாரணை நடத்தப்படுமா என்பது பற்றி கருத்து தெரிவிக்க பிஃபா மறுத்துவிட்டது.
Lankasri Sports : jega

இத்தாலி வீரரை தாக்கியதற்கு ஷிடேன் மன்னிப்பு கேட்டார் அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது பிரான்சு கேப்டன் ஷிடேன், இத்தாலின் மெட்ராசியை தலையால் முட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்து வெளி யேற்றினார்.

இதனால் பெனால்டி ஷூட்டின் போது ஷிடேன் இல்லாதது பிரான்சு அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதுவே பிரான்சு தோல்வி அடைய ஒரு காரணமாகவும் அமைந்து விட்டது.

இந்த சம்பவத்தால் தலைசிறந்த வீரர் என்ற பேசப்பட்ட ஷிடேன் மிகவும் அவனமாத்திற்கு ஆளாகி உள்ளார். எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே எதிர் அணி வீரரை தாக்குவது கிடையாது. ஷீடேன் கோபப்படும் அளவுக்கு மெட்டராசி ஏதோ கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.

மெட்டராசி, ஷிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த தகாத செயலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. எனினும் இது தொடர்பாக ஷிடேன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள டி.வி. நிறுவனம் ஒன்று ஷிடேனின் தங்கையை மெட்டராசி தரக்குறைவாக பேசினார். ஆதாவது அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.

இதன் காரணமாகவே ஷிடேன் கோபத்தின் உச்சிக்கே சென்று மெட்டராசியை தாக்கி உள்ளார். என செய்திகள் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது. ஷிடேன் ஏன்ப அவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியாத நிலையில் தனது அணியின் சக வீரர்களிடம் ஷிடேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோபத்தில் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்து விட்டேன். அணியின் வெற்றி வாய்ப்பை கெடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என சக வீரர்களிடமும் அவர் உடை மாற்றும் அறையில் கூறியுள்ளார்.
Lankasri Sports : Viduppu.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us