திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது.
முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
கலைஞர் டிவிக்கு 10க்கு 9.35 பாயிண்டுகள் கிடைத்துள்ளன. சன் டிவிக்கு 4.64 புள்ளிகளே கிடைத்ததாம். விஜய் டிவி 3வது இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்த ரேட்டிங் 0.75 ஆகும். ராஜ் டிவி (0.62), ஜெயா டிவி (0.54), கே டிவி (0.35) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சன் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு தமிழ் சானலிடம் முதலிடத்தை இப்போதுதான் பறி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளிலேயே முத்திரை பதித்துள்ள கலைஞர் டிவி போகப் போக சன் டிவியை மேலும் அதிர வைக்கும் எனத் தெரிகிறது.
-தட்ஸ் தமிழ்