உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்
நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!
தூரத்தில் உனது உருவம் கண்டால்
என் உடல் குளிர்ந்திருக்கும்!
உன் தரிசனம் கிடைத்துவிட
தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!
நீ அருகில் நெருங்க நெருங்க
எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!
உன்னை அருகில் கண்டவுடன்
எனது இரத்தம் உறைந்துவிடும்!
உனது தலை எனது பக்கம் திரும்ப
எனது விழிகள் படபடத்து மூடும்!
உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்
என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!
உன்னுடன் பேச நினைக்கையிலே
நா உலர்ந்து பேச மறுக்கும்!
உனது நடை வேகம் குறைய
எனது கைகள் பிசைந்திருக்கும்!
என்னை தாண்டி நீ செல்கையில்
மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!
முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்
எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.