ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?
இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்!
அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது?
அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்!
யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்?
அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் அய்யப்பன் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது என்கிறார்.
யார் அந்தப் பெண்? பெண் தொட்டு அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றால் அய்யப்பiனைவிட அந்தப் பெண்ணுக்கு அதிக சக்தி இருக்கிறது என்றல்லவா பொருள்?
சூனாமானக்காரன் போல் பேசாதே! நாத்தீகம் பேசினால் நாக்கு அழுகிச் சாவாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார். அந்தப் பெண் ஜெயமாலா என்ற கன்னட நடிகை, அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். அப்போதுதான் அந்த நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார்!
கோயில் புூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக்கூடாது? பெண் கும்பிடக்கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?
விபரம் தெரியாமல் பேசாதே! ஜெயமாலா பெண். அய்யப்பன் சாமிக்குப் பெண் என்றால் பிடிக்காது! பெண்கள் கோயில் பக்கம் போகக் கூடாது!
ஏன் அப்படி? சிவபெருமான் தனது உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள் சொல்கிறார்களே? அதாவது அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாராமே? அது புளுகா?
ஓய்! சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். எனவே அவருக்குப் பெண்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது.
அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது.
அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தோசம் ஏற்பட்டுவிட்டது என்றால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, புூசை எல்லாம் சுத்த றயளவந இல்லையா?
ஆமாம்! தீட்டு நீங்க கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டும்.
ஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போதும் சுவாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றுதானே பக்தர்கள் புலம்பினார்கள்? கடவுளர் கோயிலை விட்டே ஓடிவிட்டதாகத்தானே பக்தர்கள் அலம்பினார்கள்?
ஓய்! தெரியாமல் பேசாதேயும். தீட்டுப் போகத்தானே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்கிறோம்! கும்பாபிஷேகம் செய்வதால் நாய், கோழி, பஞ்சமர் நுழைவதால் தீட்டுப்பட்டுப் போன கோயில் புனிதம் அடைகிறது!
கன்னட நடிகை ஜெயமாலா போல இன்னொரு கிறித்தவ மத நடிகை இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து கும்பிட்டதால் புனிதம் கெட்டு விட்டதாமே?
ஆமாம்! கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த யுூன் 29 ஆம் நாள், கேரள மாநிலம் கண்ணு}ரை அடுத்த தளிபரம்பாவில், இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும் இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு காணிக்கை செலுத்தினார். இதையடுத்து தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்ட அவர் புனிதப்படுத்தும் சடங்குகளுக்காக கோயில் நிருவாகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பி வைத்தார். கோயிலைப் புனிதப்படுத்துவதற்காக 10 தந்திரிகளைக் கொண்டு இரண்டு நாள்கள் 'சுத்தி திரவிய கலச" புூஜை நடத்தக் கோயில் நிருவாகம் முடிவு செய்தது. இதற்கு ரூ.25 ஆயிரம் ஆகும் எனக் கோயில் நிருவாகம் சொன்னதால் மேலும் ரூ.15 ஆயிரம் தர மீரா ஜாஸ்மின் ஒப்புக் கொண்டுள்ளார்.
சபரிமலையில் ஊழல் செய்வதற்காகவே தேவசம் சபையும், தந்திரியும் (புூசாரியும்) உன்னிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தேவப்பிரஸ்னம் நடத்தியுள்ளனர் என்று பந்தளம் அரண்மனை வட்டாரம் குற்றம் சாட்டியுள்ளதே?
அதில் உண்மை இல்லை. வெறும் கட்டுக் கதை!
பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்பது அய்தீகம். அய்யப்பன் வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு.
கோயில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து சுவாமி சிலையைத் தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது. எனவே உன்னிக்கிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் கூட்டுச் சேர்ந்து எதற்காகவோ நாடகமாடுகிறார்கள் என்று கோயில் தந்திரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உன்னிக்கிருஷ்ண பணிக்கரோ தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் புூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமலேயே புூசை செய்கிறார்கள். மீறிக் குளித்தாலும் குழாய்த் தண்ணீரில் குளிக்கிறார்கள், ஆசார நியமனம் ஒன்றும் பார்ப்பதில்லை, மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை இதனால் சபரிமலையின் புனிதம் இவர்களால் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கரக் கோபத்தில் இருக்கிறார் எனப் பதிலுக்கு உன்னிக்கிருஷ்ண பணிக்கர் குற்றம் சாட்டுகிறார்.
தந்திரியும் மேல் சாந்தியும் நம்புூதிரிப் பிராமணர்கள். உன்னிக்கிருஷ்ண பணிக்கர் அவரது பெயரில் காணப்படும் சாதியைச் சேர்ந்தவர். எனவே இந்தச் சண்டை பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்ற மட்டத்திலும் நடைபெறுகின்றது.
இதற்கிடையில் நடிகை ஜெயமாலா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக குருவாயுூர் சூரியன் நம்புூதிரி என்ற புூசாரி தெரிவித்துள்ளார்.
தான் பிரஸ்னம் நடத்திப் பார்த்த போது கோயிலுக்குள் பெண் வந்து போனதும் கூடவே கள் வாசனை இருப்பதும் தெரிந்ததாக உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறுகிறார்.
சபரிமலைக்கு யாத்திரை போகும் அய்யப்ப பக்தர்கள் 48 நாள் மச்சம், மாமிசம், கள், சாப்பிடக் கூடாது. காலில் செருப்பணியக் கூடாது, உறவினர் யாராவது இறந்தால் கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. ஆனால் பல பக்தர்கள் தலையில் இருமுடியும் இடுப்பில் மதுப் போத்தலோடுதான் மலை ஏறுகிறார்களாம்!
அய்யப்ப பக்தர்களில் பிரசித்தி பெற்றவர் நடிகர் நம்பியார். கடந்த 56 ஆண்டுகளாகச் சபரிமலைக்குப் போய் வருகிறார். ஆனால் அவர் ஒரு முடாக்குடிகார் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலோர் ஆண்டில் 360 நாளும் பாபம் செய்து விட்டு 5 நாள் மட்டும் அதனைக் கழுவ நோன்பு இருக்கிறார்கள்.
அய்யப்பன் வழிபாடு தமிழனுக்குப் புதியது. தமிழ்நாட்டுக்குப் புதியது. அய்யப்பன் ஆகமத்தில் சொல்லப்படாத கடவுள். கடந்த 50 ஆண்டுகளாகத்தான் 'சாமியே சரணம் அய்யப்பா" கூச்சல் கேட்கிறது. அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். தில்லை நடராசருக்குத்தான் நோன்பு இருந்தான். இந்த கேரள இறக்குமதியால் பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.
பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, பழைய சேர நாட்டின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க சபரிமலைச் செலவை ஒரு சாக்காக வைத்துள்ளார்கள். அதைப் பார்த்துவிட்டு ஏழையும் கடன்பட்டாவது மலை ஏறுகிறான். கார்த்திகை மார்கழியில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த கார்த்திகை மார்கழி வரையிலும் நீள்வதும் உண்டு.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார் குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர் குறைந்துவிட்டதா? என்று.
எதிலும் புதியதைத் தேடும் தமிழன் மனம் புதிய புதிய கடவுளையும் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின. இன்று மலையாள ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம் தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை கேட்டார் 'குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர்" குறைந்துவிட்டதா?" என்று.
இன்று இந்தியாவில் உள்ள பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஏழுமலையானை வழிபட நாள் தோறும் 50,000 அடியார்கள் மலை ஏறுகிறார்கள். ஏழுமலையானுக்கு நாளும் 100 கோடி பெறுமதியான தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நவரத்தினம், கோமேதகம் போன்ற விலை உயர்ந்த வைர ஆபரணங்களை அணிவித்துப் புதிய பட்டு ஆடையால் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுள்ள இலட்டுகள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் படைக்கப்பட்டு பின் அடியார்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏழுமலையானின் நிரந்தர வைப்பு நிதி 2,835 கோடியை எட்டியுள்ளதாம். கடந்த 2 ஆண்டுகளில் ரூ 500 கோடி அதிகரித்துள்ளது.
ஏழுமலையானின் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் ரூ. 600 கோடி. இதற்கான வருவாயில் ரூ. 230 கோடி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி என்கிறது தேவஸ்தானம்.
தினந்தோறும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வங்கியில் பணம் செலுத்தும் ஒரே நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டும்தான் என்பது மனங்கொள்ளத்தக்கது.
திருப்பதி ஏழுமலையானோடு சபரிமலை அய்யப்பனை ஒப்பிட்டால் பின்னவர் 'ஏழை"தான். ஆண்டு வருமானம் 75 கோடி மட்டுமே. கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது.
சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுதப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி அசுத்தமாகிக் குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது.
இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும் வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி.. சாமி.. என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவும் கிடைக்கிறது.
அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 40 கிமீ து}ரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.
இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவஸ்வம் சபை பம்பை - நீலிமலையேற்றம் அப்பாச்சி மேடு - சபரிமலை நடைபாதயில் 18 இடங்களில் உயிர்க்காற்று சுவாச மையங்களை அமைத்துள்ளது.
இது மட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது துளிகூடப் பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது பக்தர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?
அய்யப்பன் கதை அறிவுக்குப் பொருந்தாதது, அருவருப்பானது, எந்தப் பயனையும் தராதது என்பதால் இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படிக் குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டி இருக்கிறார்கள். அதைப் பார்த்தாவது தமிழன் திருந்தக் கூடாதா?
நன்றி>தினமணி.