
கன்னி மரியாளின் திருச் சொரூபத்தின் இரு கண்களில் இருந்து இரத்தம் வடிவதாக வெளியான தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை யாழ் நகரில் பரபரப்பு காணப்பட்டது. .
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சொரூபத்தின் கண்களில் இருந்து சிவப்பு நிறமான திரவம் வருவதை வீட்டில் இருந்தவர்கள் கண்டுள்ளனர்.
இது பின்னர் அயலவர்களுக்கு தெரிய வந்து யாழ் நகரம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனால் அதனைக் காண்பதற்காக மக்கள் அந்த வீட்டை நோக்கித் திரண்டனர்.
இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள புனித யுவானியார் ஆலயத்துக்கு அந்த சொரூபத்தை கொண்டு சென்று வைத்தனர்.
இதன் பின்னர் அந்த ஆலயத்துக்கும் மக்கள் திரண்டு வந்த வண்ணமிருந்தனர்.
மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆலய நிர்வாகத்தினர் திண்டாடினார்கள். பின்னர் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்த மாதா சொரூபத்தில் இரு கண்களிலிருந்தும் இரத்தம் போன்று சிவப்பு நிறத்திலான திரவம் ஒன்று வடிந்து உறைந்த நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
நன்றி>தமிழ்வின்.