புதன், ஜூலை 18, 2007

17 வருட பழைய புகைப்படங்கள் போட்டிக்காக.

இப்படி ஒரு புகைபடம் இனி எடுக்கமுடியாது, இதன் சிறப்பு என்னவெனில் ஹீ...ஹீ..இதை நான் எடுத்ததுதான். என்ன பயந்துட்டீங்களா? சும்மா தமாஸு இப்போது சவுக்கு மரங்கள் அகற்றப்பட்டு வேலிபோட்டு இருக்கிறார்கள், இது ஒரு முப்பரிமான உத்தி, பாறைகள் உங்களை நோக்கி வெளியே வருகிறதா, என்ன வரவில்லையா..படத்தை பெரிதாக்கி வாறமாதிரி நினையுங்கள் கட்டாயம் வரும். அப்பவும் வராட்டி உங்க கண்ணு ஞானக்கண் அல்ல பூனைக்கண், என்ன பயந்திட்டீங்களா? சும்மா தமாஸு, மறுபடியும்பார்றா தமாஸு

கடற்கோவில்

இது மைசூர் என நினைக்கிறேன் பழையகாலத்து வேம்பு, வேம்பம் இலைகளினூடாக சூரியனை இறக்கிப்பார்க்கும் முயற்சி.

சூரியக் காசுகள்

இது கோவாவில் சரிந்து நிற்கும் தென்னைகளை நிமிர்த்திப்பார்க்க நினைத்தன் விழைவு, உண்மையில் இவை 45 பாகை சரிந்தே காணப்படுகின்றன. தென்னையையே நிமிர்திப்பார்க்க நினைத்தவன், அது எல்லாம் பழைய கனவுகளய்யா.....

வளைந்தவர்களே எழுந்து நில்லுங்கள்


சத்தியமா இவை எல்லாம் நான் எடுத்துதான் நம்பினால் நம்புகள், நம்பாட்டாலும் நம்பித்தான் ஆகனும்.
ஓல்டு இஸ் கோல்டு எனநினைத்து இவற்றை அனுப்புகிறேன், நீங்களும் பரிசை அனுப்பி விடுங்கள், அதாப்பா கெளரவ பரிசை. என்ன வரட்டா................

சிவராசனை பிடிப்பதில் தாமதம் செய்தாரா கார்த்திகேயன்?

திருவனந்தபுரம்: பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராஜனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் திட்டமிட்ட நேரத்தில் நுழைவதை சிறப்பு விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் தடுத்து விட்டதால்தான் அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக அந்த அதிரடிப் படையில் இடம் பெற்றிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் விசாரித்தார். தற்போது கார்த்திகேயன் தனக்கு நல்ல பெயர் வாங்குவதற்காக எடுத்த ஒரு நடவடிக்கையால், சிவராசனையும், சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக முன்னாள் ராணுவ மேஜர் ரவி என்கிற ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேஜர் ரவி தற்போது திரைப்பட இயக்குநராக உருவெடுத்துள்ளார். அரண் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த ரவி. தற்போது சிவராசன்-சுபாவை அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட நேரத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மிஷன் 90 டேஸ் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.

கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைப் படையில் இடம் பெற்றிருந்த அதிரடிப்படையில் மேஜர் ரவியும் இடம் பெற்றருந்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ரவி கூறுகையில், சிவராசனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டை கமாண்டோ படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே புகுந்து அவர்களை உயிருடன் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்திகேயன் ஹைதராபாத்தில் இருந்தார். தான் வரும் வரை யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என அவர் உத்தரவிட்டார். இதனால் எங்களால் நடவடிக்கையில் இறங்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 36 மணி நேரம் நாங்கள் கார்த்திகேயனுக்காக காத்திருக்க நேரிட்டது.

திட்டமிட்டபடி நாங்கள் வீட்டுக்குள் புகுந்திருந்தால் இருவரையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் தான் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்றவர்கள் சிவராசன், சுபாவை பிடித்து விட்டால் தனக்கு பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்ற கார்த்திகேயனின் சுயநலம் காரணமாக இருவரையும் நாங்கள் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டது.

நாங்கள் வீட்டை முற்றுகையிட்ட சமயம் அங்கு 10 காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 3 பேர் டிஐஜி அந்தஸ்து படைத்தவர்கள். இவர்களில் யாரிடமாவது வீட்டுக்குள் நுழையுமாறு கூறி இருவரையும் உயிருடன் பிடிக்க கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

முக்கிய வேலை காரணமாகவே தான் ஹைதராபாத் சென்றிருந்ததாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன். சிவராசன், சுபாவை விட அந்த சமயத்தில் வேறு வேலை அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா? என்று கேட்டுள்ளார் ரவி.

ரவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தற்ஸ் தமிழ்

சனி, ஜூலை 07, 2007

தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற, 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...?

-பரணி கிருஸ்ணரஜனி-

கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.

'யாரோ என்னைப்பற்றி உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றபடியே அவரது இணைப்பைத் துண்டித்துக்கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து அடுத்த வாரத்தில் 'சிவாஜி" திரையிடப்பட்டு தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் 'வெற்றி நடை" போடும் செய்திகள் ஊடகங்கள் வழி தெரியவந்தது.

யதார்த்த நிலைமை இவ்வாறிருக்க, திடீரென்று 'சிவாஜி" திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில குரல்கள் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கத் தொடங்கின. என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆக்கிரமித்துக்கொண்டன என்பது மட்டுமல்ல இந்தப் பலவீனமான எதிர்ப்பு பெருங்கவலையையும் அளித்தது.

அப்போதே இத்தொடர் சம்பவங்கள் பற்றியும் 'சிவாஜி" திரைப்படம் குறித்தும், அதன் அரசியல் குறித்தும் எழுதத்தான் தீர்மானித்திருந்தேன். ஆனால் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மௌனம் காத்தேன். ஏனெனில் எனது எழுத்து எந்த வகையிலும் 'சிவாஜி"யை திரையிடுபவர்களுக்கும், அதன் திரையிடலை எதிர்க்கும் தமிழ்த் தேசிய குரல்களுக்கும் மாற்று விளைவுகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன்.

ஏனெனில் நான் முதலிலேயே ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பலவீனமான எதிர்ப்பைப் பதிவு செய்வதை விடப் பேசாமல் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனெனில் இந்தப் பலவீனம் இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலவீனமாக வாசிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குரல்களை அடையாளப்படுத்தும் ஒரு திரைப்படத்தை புறக்கணிப்பதாக் கூறிக்கொண்டு வெளிப்படும் ஒரு எதிர்ப்பு தன்னளவிலேயே பலவீனங்களைக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும் ஒரு சூழலில் அதன் எதிர்ப்பு எம்மவராலேயே அபத்தமாகப்பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இங்கு நடந்திருப்பதும் அதுதான்.

வேறு ஒரு வகையில் எமது ஒற்றுமையின்மையையும் பலவீனமான தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தையும்தான் இவை அடையாளப்படுத்துகின்றன. இதையொட்டித்தான் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

எனக்கு பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது.

01. 'சிவாஜி" திரைப்படம் பூசை போடப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. அதை எதிர்ப்பது என்று முடிவு செய்திருந்தால் அப்போதே அதைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏன் யாரும் அதைச் செய்யவில்லை?

02. இந்தியாவிற்கு வெளியில் தமிழகத் திரைப்படங்களைத் திரையிடுபவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடன் தொடர்பு கொண்டு 'சிவாஜி" திரைப்படத்தை வாங்கித் திரையிட வேண்டாம் என்று கேட்கப்படவில்லை. அது ஏன்?

03. முக்கியமானது தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட பெரும்பாலான ஊடகங்கள் பல 'திடீரென்று முளைத்த" புறக்கணிப்பை பதிவு செய்ததுடன் போட்டி போட்டுக்கொண்டு 'சிவாஜி" க்கான விளம்பரத்தையும் செய்து தொலைத்தன- இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.

இவையெல்லாவற்றையும் ஒருசேர உற்று நோக்கும்போது புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திலேயே செமத்தியாக அடிவாங்கத் தொடங்குவதை அவதானிக்கலாம்.

எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

01. 'சிவாஜி" திரைப்படத்தை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

02. புறக்கணிப்புக்காக சொல்லப்படும் காரணங்கள் வலுவானவைதானா? எந்த அளவு கோலின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது?

03. இந்த அளவுகோல் மற்றைய திரைப்படங்களுக்கும் தமிழக சினிமா உலகத்திற்கும் பொருந்தாதா?

04. சரி, 'சிவாஜி" திரைப்படம் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர்களின் புறக்கணிப்பிற்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றே வைப்போம். பல தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குத் தெரிந்த இந்த 'அம்சம்" ஏன் தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம்- விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை? போதாதற்கு புறக்கணிப்பையும் பதிவு செய்து திரைப்படத்திற்கு 'ரிக்கற்"றும் விற்ற அவற்றின் அரசியலை எந்த வகமைக்குள் பொருத்திப் பார்ப்பது?

இவற்றையெல்லாம் ஒரு குடுவைக்குள் போட்டு ஒரு குலுக்குக் குலுக்கி கவிழ்த்துக் கொட்டினால் பல 'உண்மைகள்" தெரிய வரும். பிரச்சினை ரஜினிக்காந்திடமோ சங்கரிடமோ இல்லை. பிரச்சினைக்குரியவர்கள் நாம்தான். அவர்களில்லை.

இதை வேறு ஒரு வகையில் சொன்னால் தலையையும் வாலையும் விட்டுவிட்டு நடுவிலை எதையோ பிடித்து இழுத்ததற்கு ஒப்பானது இது.

தமிழ்ச் சினிமா குறித்து, அது 'கோடம்பாக்கம்" சினிமாவாவேயொழிய தமிழ்ச் சினிமா அல்ல என்பதில் தொடங்கி அதை ஈழத் தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வதென்பது வரை எனக்கு ஏகப்பட்ட வாசிப்புக்கள் இருக்கிறது. இதில் அதைப் பதிவு செய்யப் போனால் இது தொடர் கட்டுரையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. (ஏற்கனவே 'கோலங்கள்" தொலைக்காட்சி தொடர் மாதிரி எனது எல்லாக் கட்டுரைகளையும் நீட்டி முழக்குவதாக நேற்றுத்தான் ஒரு நண்பர் குற்றம் சுமத்தியிருந்தார்.) எனவே குறிப்பிட்ட சில விடயங்களை அவதானிக்க பின்வரும் முகவரியில் சென்று நான் ஏற்கனவே 'தமிழக சினிமா" குறித்து எழுதிய சில கருத்துக்களை பார்க்கவும். http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=556&Itemid=60

தயவு செய்து மேற்குறிப்பிட்ட கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு அமைதியாகக் கொஞ்சம் யோசித்தாலே பிரச்சினை எங்களிடம்தானேயொழிய அவர்களிடம் இல்லை என்ற உண்மை 'கொஞ்சூண்டாவது" தெரியவரும்.

ரஜினிகாந்த் என்ற நபரின் திரைப்படங்கள் மட்டுமல்ல அவரே தமிழ்ச்சூழலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. சங்கர் என்ற மனிதருக்கும் இது பொருந்தும். அதற்கான காரணங்கள் 'சிவாஜி" படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில நண்பர்கள் முன்வைத்த காரணங்களையும் விட வலுவான பின்னணி கொண்டது. அதையும் இங்கு நான் அடுக்க விரும்பவில்லை. அது எனது இந்தப் பத்தியின் நோக்கத்தை திசைமாற்றி விடக்கூடியது.

ஈழத்தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, பல்வேறு காரணங்களால் புறக்கணிப்புக்கு முழுத்தகுதியும் கொண்ட ஒரு திரைப்படத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொண்ட அவலத்தைப் பேச முற்படும் இப்பத்திக்கு அவை தேவையற்ற தரவுகள் என்றே கருதுகிறேன்.

தமிழ்ச் சினிமா, சினிமா ரசனை, தமிழ் அடையாளம், மாற்று சினிமா, எமக்கான சினிமா என்று பேசுவதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் இது குறித்த கருத்துருவாக்கங்கள் தமிழ்த் தேசிய ஊடகங்கள் வழி ஆக்கபூர்வமான முறையில் எங்கேனும் முன்வைக்கப்பட்டிருக்கிறதா?

மாறாக எமது ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடைத்தரகர் வேலைதான் செய்து கொண்டிருக்கின்றன. எமது ஊடகங்களின் இந்தப் புண்ணியத்தில் புலம்பெயர் தமிழர்கள் கோடம்பாக்க சினிமா குறித்த அறிவியலில் 'புல்போர்ம்" இல் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் 'சிவாஜி"யைப் புறக்கணி. 'எம்ஜிஆரைப்" புறக்கணி என்றால் என்ன எதிர்வினை கிடைக்கும்....

படிப்படியாக கோடம்பாக்க சினிமா மோகத்திலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கருத்தியலை பல தளங்களிலும் வளர்க்க வேண்டிய தமிழ் ஊடகங்களே தமிழர்களை அந்தச் சாக்கடைக்குள் அமிழ்த்தி வைத்துள்ளதும் அதையே தமது தேசியத் 'திருப்பணி"யாக செய்து வரும் சூழலிலும் இத்தகைய புறக்கணிப்புப் போராட்டங்கள் மலினப்பட்டுவிடும் அபாயம் தொடரத்தான் செய்யும்.

இது இறுதியில் தமிழ்த் தேசியம் என்பதே பலவீனம் நிறைந்ததுதான் என்ற ஒட்டுமொத்த வாசிப்புக்குத்தான் வழிசமைக்கும். எனவே புறக்கணிப்பு போராட்டம் நடத்த முன்வரும் சமூக ஆர்வலர்கள் 'புலம்பெயர் தமிழர்கள்" என்று விளித்து அறைகூவல் விடுவதைத் தவிர்த்து புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த இரட்டைப்போக்குக்கு எதிராக ஒரு போராட்டத்தை முதலில் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த மக்களை நெறிப்படுத்தும் ஊடகங்களே 'சிவாஜி" திரையரங்கை நோக்கி மக்களை கூவிக்கூவி அழைத்துச் செல்லும்போது நீங்கள் கொஞ்சப்பேர் மட்டும் கத்துவது அபத்தமாக இருக்கிறது. வேறு ஒரு வகையில் அநியாயமாகவும் தெரிகிறது.

தயவு செய்து மக்கள் மீது பழி போடாதீர்கள்.

எனவே முழுப்பழியையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவை தமிழ்த் தேசிய ஊடகங்கள்தானேயொழிய அதைத் திரையிடுபவர்களோ அன்றி மக்களோ அல்ல.

ஒரு இனத்தை எடை போடுவதற்கு அந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊடகத்துடன் குறிப்பிட்ட சில மணிநேரங்களை செலவு செய்தால் போதும் என்று சொல்வார்கள். தமிழினத்தை எடை போடுவதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். அதன் இரட்டைத்தன்மையை அறிந்து கொள்வதற்கு. ஒருபக்கம் விடுதலைத் தீயின் கங்குகளும் மறுபக்கம் கோடம்பாக்கத்து கழிவுகளை தினமும் புசிப்பதால் வரும் துர்நாற்றமும்....

தமது தவறுகளை மறைப்பதற்காக வியாபார நிர்ப்பந்தம், போட்டி, ஜனரஞ்சகம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை தமிழ்த் தேசிய ஊடகங்கள். போராடும் இனத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களுக்கு எங்கிருந்து வந்தது போட்டி....

உயிரைக்கொடுத்துப் போரடுகிறவனுக்கு அது என்ன ஜனரஞ்சகம்....
யாராவது விளக்கமளித்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

இனி விடயத்திற்கு வருவோம்.
நாம் யார்? விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம். எமக்கென்று சில பொதுவான நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதன் வழியே சில கருத்துருவாக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. அது என்னவென்று சாதாரண ஒரு நபருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அது என்னவென்பதை கண்டடைவதும் அதன் வழியே அக்கருத்தியலை வளர்ப்பதும் தான் ஊடகங்களின் பணி என்று சொல்லப்படுகிறது.

உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுவதில்லை. செய்தி என்ற வடிவத்தில் தமது அரசியலைத்தான் பேசுகின்றன. தமது தேவை சார்ந்து எழுந்த கருத்துருவாக்கங்களைத்தான் முன்வைக்கின்றன.

இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக என்று பல வழிகளிலும் பிளவுபட்டிருக்கும் உலகம் தாம் சார்ந்திருக்கும் குழுமம் சார்ந்து எழுந்ததும் தமக்குத் தேவையானதென்று கருதுவதுமான கருத்தியலைத் தமது ஊடகங்கள் வழி தொடர்ந்து கட்டமைக்கின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் என்ன கருத்தியலைப் பேசுகின்றன என்று பார்த்தால் அவை அமெரிக்காவின் சண்டித்தனத்தையும் அதன் உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தையும் தொடர்ந்து தக்க வைக்கும் கருத்துருவாக்கங்களைத்தான் பேசுகின்றன - கட்டமைக்கின்றன. வெளிப்பார்வைக்கு பல தோற்றங்கள் காட்டினாலும் அதன் அடித்தளமும் அடிப்படையும் மேற்குறித்த கருத்துருவாக்கங்கள்தான்.

இப்படித்தான் இந்திய ஊடகங்கள் இந்துத்துவத்தையும் பாகிஸ்தானிய ஊடகங்கள் இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிங்கள ஊடகங்கள் பௌத்த பேரினவாதத்தையும் பிடித்துத் தொங்குகின்றன. இந்தக் கருத்துருவாக்கங்கள் சரியா தவறா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இனக்குழுமத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒரு கருத்தியல் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆகவே எமது தமிழ் ஊடகங்களும் ஒரு கருத்தியலை பேசவேண்டும் என்பது வெளிப்படை. அது என்ன? நாம் ஒரு தேசிய இனம் என்றும் எங்களுக்கென்று ஒரு பூர்வீக நிலம் இருக்கிறதுதென்றும் அதில் நாம் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் என்றும் கேட்டுப் போராடுகிறோம்.

ஆகவே எமது ஊடகங்கள் பேச வேண்டிய கருத்தியல் இதைச்சுற்றியதென்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சரி அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எனவே எமது ஊடகங்கள் வழி வெளிப்பட வேண்டியவை இவைதான் - இவை மட்டும்தான். ஆனால் எமது ஊடகங்களைத் திறந்தால் எமக்குத் தெரிவது என்ன? பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான புதுப்புது இடங்கள்தான்.

எனவே "சிவாஜி" திரைப்படத்தில் ரஜினிக்காந்த் பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான "னகைகநசநவெ டழஉயவழைn" எதையாவது சுட்டிக்காட்டலாம் என்று நினைத்து ஒரு தமிழன் ஓடுவதில் ஏதும் வியப்பதற்கில்லை. இது தமிழ்த் தேசிய ஊடகங்கள் தினம் தினம் வீட்டுக்குள் கொண்டுவந்த கருத்தியல் சிந்தனை. என்னைப் பொருத்தவரை 'சிவாஜி" யைப் பார்க்க ஒருவர் திரையரங்கு செல்லாமல் இருப்பதுதான் ஆச்சர்யமான விடயம்.

'சிவாஜி" மட்டுமல்ல 99 விழுக்காடு கோடம்பாக்க திரைப்படங்கள் எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு மீது ஒரு வன்முiறாகக் கட்டவிழ்ந்து 'தேசியம்" என்ற முதன்மைக் கருத்துருவாக்கத்தினைச் சிதைத்து எமது பேராட்டத்தையும் விடுதலையையும் பின்னடையச்செய்கின்றன.

எனவே சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் 'சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க முற்பட்ட செயலானது பிரச்சினையின் மூலத்தை - அதன் வேரை விட்டுவிட்டு அதன் ஒரு விளைவு மீது குற்றத்தைச் சுமத்தியதற்கு ஒப்பானது.

நான் ரஜினிக்காந்த் என்ற மனிதருக்கு வருகிறேன். அவர் யார் என்று படத்தை புறக்கணிக்கச் சொன்னவர்கள் தெளிவாகவே பட்டியலிட்டுள்ளார்கள். ஆனால் எமது தமிழ் ஊடகங்கள் அவர் குறித்து கட்டமைத்திருக்கும் பிம்பம் அவரை ஒரு நல்ல நடிகராக மட்டுமே.. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் அவர் நடித்த 'நெற்றிக்கண்" படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் விரும்பாத போதும் என் வீட்டிற்குள் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் ரஜினிக்காந்த் வந்துவிட்டார். அவர் நாளையும் வரலாம்.....

என் கேள்வி இதுதான். இதையே திரையரங்குக்கு போய்ப்பார்த்தால் மட்டும் ஏன் பிரச்சினை என்கிறீர்கள்? தமிழ்த் தேசிய ஊடகங்கள் ரஜினிக்காந்த் என்ற மனிதரை வீட்டுக்குள் கொண்டு வருவதை முதலில் தடை செய்யுங்கள்.

தழிழ்த் தேசிய ஊடகங்களில் 'கோடம்பாக்க சினிமா" ஒரு பேசு பொருளாக (ஏன் மையப்பொருளே அதுதான்) இருக்கும் வரை தயவுசெய்து யாராவது கோடம்பாக்க சினிமாவை - சினிமாக்காரர்களை - சினிமாக் கலை விழாக்களைப் புறக்கணியுங்கள் என்று போராட்டம் நடத்தாதீர்கள்.

எமது தமிழ் ஊடகங்கள் கோடம்பாக்க சினிமாத் தளைகளிலிருந்து விடுபடும் பட்சத்தில் கோடம்பாக்க சினிமாவிலிருந்து எமது மக்களே அந்நியப்பட்டுவிடுவார்கள்.
போராட்டம் எல்லாம் தேவையில்லை.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாவற்றையும் ஒரு ஊடகத்துறை நண்பர் ஒருவரிடம் கூறினேன். அவர் சொன்னார். 'சினிமா இல்லாமல் எந்த ஊடகத்தையும் நடத்த முடியாது. நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்". அதற்கு நான் 'மக்கள் தொலைக்காட்சி" வந்த பின்னும் இன்னும் பித்தம் தெளியவில்லையா என்றேன்.
அவர் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டார்.

ஒரு இனத்திற்கான ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை 'மக்கள் தொலைக்காட்சி" யைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த முறை நான் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தபோதுதான் 'மக்கள் தொலைக்காட்சி" யின் ஆரம்ப பணிகள் நடந்துகொண்டிருந்தன. மேற்குறிப்பிட்ட ஊடகத்துறை நண்பர் அடித்த "உழஅஅநவெ" ஐத்தான் நான் தமிழகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன். அதற்காக இப்போது வெட்கித் தலைகுனிகிறேன்.

'மக்கள் தொலைக்காட்சி" அது ஒரு ஊடகம் இல்லை. எமது ஊடகக்காரர்களுக்கு அது ஒரு பாடம். தமிழகத்திலேயே இந்தச் சாதனையை அவர்கள் நிலை நாட்டியிருக்கும்போது இங்கு நம்மால் முடியாதா? கிட்டத்தட்ட தமிழகத்தில் 'மக்கள் தொலைக்காட்சி" யின் உதயம் என்பது சூரியனை மேற்கில் உதிக்க வைத்ததற்கு ஒப்பானது.

எமது தமிழ் ஊடகங்களிடம் உள்ள பிரச்சினையே மக்களினுடைய விருப்பாக - தேர்வாக தாமே சில விடயங்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளவதுதான். இன்று 'மக்கள் தொலைக்காட்சி" மக்களுக்கு எது பிடிக்கும் என்பதையும் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் தமிழகத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்குத் தேவையானதும் அவசரமானதும் ஒரு மக்கள் தொலைக்காட்சியே - ஒரு மக்கள் வானொலியே - ஒரு மக்கள் பத்திரிகையே.....
இப்போது இருக்கும் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டு ஊடகங்கள் எதுவும் வேண்டாம். இது உயிர்ப்பிரச்சினை. பலர் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் போது தயவு செய்து 'ஜனரஞ்சகம்" பேசாதீர்கள். உங்களுடைய 'ஜனரஞ்சகம்" எமது தேசியக் கருத்துருவாக்கத்தினைச் சிதைப்பதனால் தயவு செய்து அதிலிருந்து மீண்டு விடுங்கள்.
மேலே குறிப்பிட்டது போல் போல் எமது முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எமது ஊடகங்கள் வழி 'கோடம்பாக்க சினிமா" கடை விரிப்பது இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கிறது. எமது விடுதiலையைப் பின்னடையச் செய்கிறது. இது சாதாரண ஒருவருக்குத் தெரியாமலிருக்கலாம் - ஆனால் தேசியத்தை வரித்துக் கொண்ட ஊடகங்களிற்குத் தெரியாமல் இருப்பது தமிழினத்தின் அவலமா? அறியாமையா?

இறுதியாக ஒரு விடயம். தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்த விடயத்தையும் எதிர்ப்பதென்றாலும் புறக்கணிப்பதென்றாலும் அதை நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். குறிப்பாக தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் ஊடகங்களின் பங்களிப்பு அவசியம் என்பதை நாம் மட்டுமல்ல அந்த ஊடகங்களும் உணர வேண்டும்.

தமிழ்த் தேசிய ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்காத இரட்டை நிலைப்பாடு எடுக்கும் எந்தப் போராட்டத்தையும் நடத்தாதீர்கள். அது இந்த உலகத்திற்கு எம்மையே இரண்டாகப் பிளவுபடுத்திக் காட்டக்கூடியது. இது எமது போராட்டம் சார்ந்த நல்ல அறிகுறி அல்ல.....

ஒரு கொசுறுச் செய்தி:

நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன். வீட்டுக்குள் மட்டுமல்ல நான் செல்லுமிடமெல்லாம் என்னைப் பின்தொடரும் தமிழ் ஊடகங்கள் என்னைத் தொடர்ச்சியாக 'சிவாஜி" திரையரங்கை நோக்கிக் துரத்திக்கொண்டேயிருக்கின்ற��
. நான் தமிழ்த் தேசியத்தை இறுகப்பற்றியவன். அதன்வழி நடப்பவன். தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த அழைப்பை தொடர்ச்சியாக நிராகரிப்பதனூடாக எனது தேசிய அடையாளத்தை இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன். அதனால்தான் எனது 'தேசிய" அடையாளத்தைக் காப்பாற்ற நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன்.
http://www.tamilnaatham.com/articles/2007/...ani20070706.htm

வெள்ளி, ஜூலை 06, 2007

சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்-திலகவதி.

பழனி: சினிமா மோகத்தால், சீரழியும் இளைஞர்கள், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, படம் பார்க்க கால் கடுக்க தியேட்டர்கள் முன்பு காத்துக் கிடப்பது ஆகியவற்றை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் கூடுதல் டிஜிபி திலகவதி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு திலகவதி பேசுகையில், சினிமாவும், டி.வி.யும் சேர்ந்து இன்றைய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது. இதன் மூலம் எந்த ஆங்கில ஆதிக்கம் வேண்டாமென்று நாம் சொன்னோமோ அது மீண்டும் நமது நாட்டில் வந்து விட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள், சினிமா மோகம் கொண்டு அலைகின்றனர். எந்த சினிமா ரிலீஸ் ஆனாலும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை இடுவதும், பாலாபிஷேகம் செய்வதும், படத்தைக் காண டிக்கெட்டுக்காக கால் கடுக்க வரிசையில் நிற்பதுமாக சீரழிந்து வருகிறார்கள்.

திரைப்படங்கள் கவர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன. இதில் பெரும்பாலான இளைஞர்கள் நேரத்தை வீண் செய்வதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் வன்முறை, கொலை, கொள்ளை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

குடும்ப நல ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அநியாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, இளைஞர்கள் பகத்சிங், சேகுவாரா போன்ற தியாகிகளைப் போன்று, உண்மைக்காக போராட வேண்டும் என்றார் திலகவதி.
மூலம்: http://thatstamil.oneindia.in/news/2007/07...ilagavathy.html

வியாழன், ஜூலை 05, 2007

உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகளை உடைத்தெறிந்த சிவாஜி!!!

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

ஆஸ்கர், கேன்ஸ் விருதுகள் நமக்கு கிடைக்கவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ஆஸ்கர் விருது என்பது ஓர் அமெரிக்கக் குறியீடு; அது அமெரிக்கப் படங்களுக்கானது. நாம் எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். "அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை "அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.
- நன்றி: தினமணி

திங்கள், ஜூலை 02, 2007

சென்னை வந்தது நிமிட்ஸ்: கடும் எதிர்ப்பு!


சென்னை: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப் பெரும் அணு சக்தியால் இயங்கும் போர்க் கப்பல்களில் ஒன்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ். ஓல்ட் சால்ட் என்ற செல்லப் பெயர் கொண்ட இந்தக் கப்பல் ஈராக் போரில் பெரும் பங்கு வகித்தது.


Shot at 2007-07-02

இந்தக் கப்பலை தளமாக பயன்படுத்தித்தான் ஈராக் மக்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கி அழித்தன. இக் கப்பலில் இரண்டு அணு உலைகள் உள்ளன.

இக்கப்பல் பல்வேறு நாடுளுக்கு சுற்றுலாவாக சென்று வருகிறது. அந்த வகையில் சென்னைக்கும் இக்கப்பல் வந்துள்ளது. ஆனால் அணு சக்தியுடன் கூடிய இந்தக் கப்பல் சென்னைக்கு வந்தால் சென்னை நகருக்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்தார். இக்கப்பலால் அணு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 6000 போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிமிட்ஸ் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஊழியர்களை, இன்னொரு அமெரிக்க கப்பல் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வரும். பின்னர் வருகிற 5ம் தேதி வரை சென்னையில் அவர்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

சென்னை துறைமுகத்திலிருந்து நேராக அவர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்தது பல்வேறு பிரிவுகளாக பேருந்துகள் மூலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.

இதற்கிடையே, நிமிட்ஸ் கப்பலால் ஆபத்து ஏதும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், இந்திய கடலியல் பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடனும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் நிமிட்ஸ் கப்பலைக் கண்காணித்தபடி இருக்கும். இதில், அணு சக்தித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு தங்கியுள்ளது.

நிமிட்ஸ் வருகையை எதிர்த்து இன்று சென்னை துறைமுகம் எதிரே இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளன.

எந்த ஆபத்தும் இல்லை-நிமிட்ஸ் கேப்டன்

இதற்கிடையே நேற்று பத்திரிக்கையாளர்கள் நிமிட்ஸ் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடல் எல்லையில் நின்று கொண்டிருந்த நிமிட்ஸ் கப்பலுக்கு சிறிய கப்பல் மூலம் பத்திரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களிடம் கப்பலின் கேப்டன் மைக்கேல் மெனசீர், கமாண்டர் ஜான் டெரன்ஸ் பிளாக், ஆகியோர் பேசினர். அவர்களிடம் கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தக் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் கூடியது.

57 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. இதனால் உங்களுக்கு (இந்தியாவுக்கு) எந்தவித ஆபத்தும் கிடையாது என்று உறுதியளிக்கிறோம் என்றனர்.

அணு ஆயுதங்கள் உள்ளதா என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, சில விஷயங்களை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது என்று மழுப்பலாக அவர்கள் பதிலளித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/02/nimitz.html

`நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை!!!

அமெரிக்காவின் மிகப் பிரமாண்டமான போர்க்கப்ப லான `நிமிட்ஸ்' சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பல் 90 விமானங்களை சுமந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 போர் விமானங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் அணு ஆயுதங்களும், நீண்ட தூரத்துக்கு பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் இருக்கின்றன.இந்த கப்பலில் உள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று சர்ச்சை கிளம்பியது.

ஆனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டிருப்பதால் நிமிட்ஸ் கப்பல் சென்னை வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நிமிட்ஸ் கப்பல் இன்று பகல் சென்னையில் இருந்து சுமார் 100 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. நாளை (திங்கள்) அதிகாலை 6 மணிக்கு நிமிட்ஸ் சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கடல் மைல் (3.7 கி.மீ.) தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும். நிமிட்ஸ் கப்பலுக்கு துணையாக பிக்னி என்றொரு போர்க்கப்பலும் வருகிறது.

இந்த 2 கப்பல்களிலும் சேர்த்து 450 உயர் அதிகாரிகள் உள்பட சுமார் 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் 5-ந்தேதி வரை சென்னையில் இருப்பார்கள். அப்போது சமூகசேவையில் ஈடுபடுவார்கள்.

சுற்றுலா செல்வதோடு, ஷாப்பிங் செல்லவும் அமெரிக்க வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடற்படை, சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் மற்றும் சென்னை போலீசார் ஒருங்கிணைந்து விரிவாக செய்துள்ளனர்.

அமெரிக்க வீரர்கள் நாளை முதல் 5-ந்தேதி வரை 4 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருப்பார்கள். மொத்தம் உள்ள 5450 வீரர்களில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்ஸ்களிலும் தங்க வைக்கப்படுவார்கள்.

3, 4-ந்தேதிகளில் அமெரிக்க வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப் படுவார்கள். இந்திய கடற்கரை அதிகாரிகள் அவர்களுக்கு துணையாக செல்வார்கள். சென்னை போலீசின் அதிரடிப்படை வீரர்கள் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

ஜுலை 4-ந்தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தினமாகும். அன்றைய தினத் தன்று, சென்னையில் தங்கி இருக்கும் அமெரிக்க வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வீரர்கள் எந்தெந்த பொழுதுபோக்கு மையங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. கிழக்கு கடற்கரைசாலை, மகாபலி புரம், கோவளம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க வீரர்கள் செல்வார்கள்.

இதற்காக தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தங்கி புத்துணர்ச்சி பெறும் நோக்கத்தில் அமெரிக்க வீரர் கள் வருகின்றனர். எனவே அமெரிக்க வீரர்களை குதூ கலப்படுத்தும் வகையில் ஏராளமான விசேஷ ஏற்பாடு களை இந்திய கடற்படை செய்துள்ளது.

இதற்கிடையே நிமிட்ஸ் கப்பலில் இருந்து கதிர்வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறி விக்கப்பட்டுள்ளது. என்றாலும் நிமிட்ஸ் அணு கதிரியக்கம் பற்றிய சர்ச்சை எழுந்ததால் நிமிட்ஸ் கப்பல் சென்னையில் இருக்கும் 4 நாட்களும் அடுத் தடுத்து பாதுகாப்பு சோதனை களை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

6 இடங்களில் சோதனை மையம் உருவாக்கப்பட்டுள் ளது. நிமிட்ஸ் கப்பலில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் இந்திய கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கும். இதில் ராணுவ ஆய்வு நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி நிமிட்ஸ் கப்பலை சுற்றி உள்ள கடல் நீரை சோதனை செய்து பார்ப்பார்கள்.

சென்னை துறைமுகத்தில் 3 சோதனைக்கூடங்கள் உருவாக் கப்பட்டு இருக்கிறது. அவர்கள் காற்று, தண்ணீரை பரிசோதித்து கதிர்வீச்சு ஏதேனும் உள்ளதா என்று உறுதி செய்வார்கள். இவை தவிர சென்னை கடலோரப் பகுதியில் 2 வேன்கள் ரோந்து சுற்றி வரும்.

அந்த 2 வேன்களிலும் நவீன ஆய்வுக்கூடம் உள்ளது. இந்த நடமாடும் வேன்கள் மூலமாக கடற்காற்று சோதித்து பார்க்கப்படும். நாளை காலை முதல் இந்த வேன்கள் சென்னை கடலோரத்தில் ரோந்து சுற்றி வரும்.

கதிர்வீச்சு சர்ச்சை எழுந் துள்ளதால் நிமிட்ஸ் கப்பலில் இருந்து பொருட்களை இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு இரவில் நகர்ந்து செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிமிட்ஸ் கப்பலை நாளை காலை முதல் சென்னை மக்கள் கடற்கரை பகுதியில் இருந்து பார்க்க முடியும்.

மாலைமலரில் இருந்து.........
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us