நான் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பேன். அது என்னவாகிலும் இருக்கலாம். அதன் படி நடக்கவேண்டும், அதனை நடத்திமுடிக்க வேண்டும் என்று, வருட ஆரம்பத்தில் நினைத்து உறுதிமொழி எடுப்பேன். ஆனால் வருட இறுதிக்குள் அது என்னை பாடாய்படுத்தி, முடிக்கவிடாமல் செய்து விடும். என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.
ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.
எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.
அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.