திங்கள், மார்ச் 05, 2007

ஆட்சியை இழந்திருக்கும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான துரப்பு சீட்டாக விடுதலைப்புலிகள் என்ற நாமத்தை பயன்படுத்தி வருகிறார்.

சென்றமாதம் தமிழக அரசாங்கத்தின் ஆதரவில் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட சங்கமம் நிகழ்சியினை கலைஞர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியே முன்னின்று நடாத்தி இருந்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளராக முன்னைநாள் வெரிதாஸ் வானொலி பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் முக்கிய பங்காற்றி இருந்தார்.

குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இன்று இரவு ஜெயா தொலைக்காட்சி பரப்பான நிகழ்ச்சி ஒன்றை சங்கமம் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது. ஆரம்பத்தில் கலைஞரையும் கனிமொழியையும் விமர்சிக்கும் நிகழ்ச்சி என எதிர்பார்க்கப்பட்டபோதும் குறிப்பிட்ட நிகழ்ச்சியானது முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளை தமிழக அரசே ஆதரிப்பது போலவும் ஜெகத் கஸ்பார் விடுதலைப் புலிகளுக்காக உலகம் பூராகவும் திரிந்து கோடிக்கணக்கில் நிதி சேகரிப்பதாகவும் சென்றவருடம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டதாக கூறப்படும் நாச்சிமுத்து சோக்கிரடிஸ் என்பவருக்கும் ஜெயத் கஸ்பாருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் நிகழ்ச்சியில் பரபரப்பாக ஒலிபரப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற திருவாசகம் வெளியீட்ட விழாவிற்கு சொகிரடிஸ் இவரை அழைத்திருந்ததாகவும் குறித்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட அதே வேளை குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சியின் ஊடாக ஜெயகத் கஸ்பாருக்கு பெரும் தொகையான பணத்தினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் குறித்த பணம் யாருக்கு கொடுக்கப்பட உள்ளது என்ற கேள்வி குறியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை மத்திய மாநில புலனாய்வு துறைக்கு சமர்பிப்பிப்பதாகவும் தெரிவிக்கபட்டது. இவற்றுக்கெல்லாம் மேலாக சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் என்ற கிறீஸ்தவ நிறுவனத்திற்கும் புலி முலாம் பூசியது வேதனைக்குரியது. இதன்மூலம் பார்பன தொலைக்காட்சியான ஜெயாரி.வி கிறீஸ்தவ மதத்திற்கு சேறு பூசும் செயலையே செய்துள்ளதுடன் ஜெயகத் கஸ்பார் ஒரு காங்கிரஸ் காறன் என்பதை சொல்ல மறந்தது ஏனோ?

ஆட்சியை இழந்திருக்கும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான துரப்பு சீட்டாக விடுதலைப்புலிகள் என்ற நாமத்தை பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தில் என்ன நடந்தாலும் அது விடுதலைப்புலிகளை ஊடுருவவிட்டுவிட்டார்கள் அதனால்தான் இந்த பிரச்சினை என பிரசாரம் செய்து வருகிறார்கள். வெறும் பதவிக்காக கீழ்தரமான முறையில் ஜெயலலிதா ஈழத்தமிழரின் பிரச்சினையை பயன்படுத்தி வருகிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் எதிராக கீழ்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதாவுடன் சாமி சேர்ந்திருப்பதுதான் வேதனையான விடயம். சாமிக்கு எப்போது ஞானம் பிறக்கும்? இந்த விடயங்களில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் விழிப்பாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும்.
நன்றி:-லங்காசிறீ.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us