சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்:
நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40.
நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர் இறந்து 2 வருடங்களின் பின்னர்தான் எனக்கு தெரிந்தது.
நான் இருக்கும் வீட்டில் 3 பெண்களும் 4 இளம்பெண்களும் உள்ளனர். வீட்டில் ஆண்கள் யாரும் கிடையாது. நான் போக விரும்புவதாக தெரிவிக்கும் போதெல்லாம் என்னை தாக்கினார்கள். சம்பளத்தைபற்றி கதைத்தால் நிலமை மோசம்.
முதல் இரண்டு வருடங்களும் நிலமை சாதாரணமாக இருந்தது. சம்பளம் தந்தார்கள். நான் அவர்களுடன் எல்லாம் வெளியில் சென்றுவந்தேன். நான் இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பொருட்களும் உடுப்புகளும் எனது குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்தேன். அவைகள் எதுவும் இன்று பிரயோஜனப்படப்போவதில்லை. காரணம் குழந்தைகள் யாவரும் வளர்ந்துவிட்டனர்.அந்த குடும்பத்தில் உள்ள ஒரு இளம்பெண் மட்டும் அனுதாபம் உள்ளவர்.
சாப்பாடு பற்றி எதுவித பிரச்சினையுமில்லை. பிழையான வாக்குறுதிகளை நம்பி இருந்துவிட்டேன்....
நான் அவர்களை நீண்டகாலமாக நம்பிவிட்டேன். இப்ப நான் எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன். என்னை வீட்டிற்கு போகவிட்டு,எனது குழந்தைகளை பார்த்து எனது சொந்த மண்ணில் என்னை சாக விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Marie தன்னை அந்த வீட்டிலிருந்து மீட்கும்படி அதிகாரிகளிடம் கேட்கிறார். ஆனால் அவர் இருக்கும் வீடு எங்கே உள்ளது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் தான் தங்கியிருக்கும் வீடு Riyadh ல்தான் உள்ளது என்பதனை அந்த வீட்டிற்க்கு வருகை தந்திருந்த ஒரு பெண் விருந்தாளி மூலம் அறிந்து வைத்துள்ளார்.
அந்த பெண்ணுடன் கதைத்த பின்னர் arabnewsஉடனடியாக K.B.G. Premadasa வை (Sri Lankan Embassy’s secretary of labor affairs) தொடர்புகொண்டனர். Marie, அரப்நியூஸ்ஸிற்கு கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு Premadasa தொடர்புகொண்டு கதைத்தபோது ஒரு பெண்தான் கதைத்துள்ளார். அவரும் அவருடைய வீடு எங்கு உள்ளது என்ற விபரத்தை தெரிவிக்க மறுத்துள்ளார். இதுபற்றி தூதரகம் உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளும் பிரேமதாஸா தெரிவித்துள்ளார்.
மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் பொருத்துக்கொள்ளுங்கள் --- Shankarlaal
அரப்நியூஸில் வெளியான செய்தி:
Maid Claims Slave Status in Household
Mohammed Rasooldeen, Arab News
RIYADH, 14 August 2007 — The woman on the other end of the phone line had a disturbing story to tell. Speaking in Tamil, Anista Marie of Chilaw, a coastal town about 70 km from Colombo, says she has been imprisoned in a house in Riyadh for the past 10 years. Were it not for a sympathetic family member, she may not have been able to make the phone call to Arab News yesterday.
“When I came here I was 30 years of age,” she told this reporter. “Now I am 40 and I have never taken holiday leave, nor have I been paid in the past eight years.”
Marie is asking authorities to rescue her from the Saudi household, but she is unsure of her location. She said she only knows that she is in Riyadh because a maid from a visiting family told her.
After speaking to the woman, Arab News immediately contacted K.B.G. Premadasa, the Sri Lankan Embassy’s secretary of labor affairs, who called the number provided to Arab News by Marie, and spoke to whom he believes is the maid’s sponsor, a woman. “She refused to give her whereabouts,” he said, adding that the embassy was going to contact local authorities about the case.
Marie, whose voice was trembling, said she had four children back home. She says that her husband, a fisherman, has passed away. She said she learned of her husband’s fate from a third party two years after his death.
According to the woman, the household consists of three women with four teenage daughters. “There are no men in the house,” she said. “They assault me when I say that I want to go home. It’s worse when I talk about the salary.”
According to the maid, the first two years were relatively normal: She was paid her salary and went out with the family.
“Back then I bought things for my children,” she said. “They’re still packed in two suitcases and the clothes can’t be used now because they’ve grown out.”
Marie says that one of the teenage girls sympathizes with her, which is possibly why she was able to contact Arab News.
Food isn’t an issue, she pointed out, but she’s been living under false promises for so long that she says that at this point she’s only interested in escape.
“I believed them for so long. Now I have lost all hope,” she said. “Let me go home and see my children and die on my soil.”
Last year 64-year-old Filipino Leonora Somera was discovered to have worked 18 years without pay, partly as a shepherd in Al-Baha, about 275 km south of Jeddah. Her situation was exacerbated by the fact that the son of her sponsor, who had passed away, was also not providing her with sustenance. Somera is still in a women’s shelter in Jeddah, run by the Philippines Consulate, fighting to recoup nearly 20 years of back pay.
http://www.arabnews.com/?page=1§ion=0&...;m=8&y=2007
யாழ்.காமில் இருந்து.........