மீண்டும் பிறந்து வா
அண்ணா பரராஜ சிங்கமே
சிங்களப்படைகளின் கூலிகளால்
அனியாயமாக வீழ்ந்தாயே!
நியாயம் வாழவேண்டும் என
நீதியின் முன் எமக்காக
வாதாடிய எம் தங்கமே!
பாலன் பிறக்கும் நாளில்
பாதகர் காத்திருந்து
உம்மை சரித்தனரே!
அகிம்சை வழியில்
அழிவு வராதென
இறுமாந்து இருத்தாயா?
ஜயா இது ஜேசுவையே
காட்டிக் கொடுத்த
உலகம் ஜயா!
பாலனின் கோவிலில்
வைத்து உன் கதைமுடித்து
நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்!
பாலன் பிறந்த நாளில்
இறந்தாயே மீண்டும் பிறந்துவா
ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா.