வியாழன், மார்ச் 27, 2008

பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு சரமாரியாக அடி உதை!!!


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.

லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/03...-sinhalese.html


குமுதம்.காம் முச்சந்தி.:

சிங்கள சினிமா பட டைரக்டருக்கு தமிழ்நாட்டில் விழுந்த அடி-_உதை


''இலங்கையில இருக்குற சிங்களத்து சினிமா டைரக்டரு ஒருத்தர் 'பிரபாகரன்'னு படம் எடுத்திருக்காரு. முழுக்க முழுக்க தமிழ் போராளிகள் இயக்கத்த அதாவது புலிகளை சர்வதேச அளவில் கொச்சை படுத்துறவிதமான படமாம் அது. சிங்கள அரசே அந்த டைரக்டருக்கு பக்கபலமா இருந்து உதவிபன்னறாம். அப்படிப்பட்ட சினிமா படத்தை எடுத்துகிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாரு அந்த டைரக்டர். கே.கே. நகர்ல இருக்குற ஜெமினி கலர் லேபில் வச்சு 'தமிழ் டப்பிங்' வேலைய செய்யுறதோட அறுபதுக்கும் மேற்பட்ட படக்காப்பி (ப்ரிண்ட்) போடுற திட்டத்திலேயும் இறங்கியிருந்தாரு.

ரகசியமா நடந்துகிட்டிருக்கிற இந்த படவேலை பத்தின தகவல் எப்படியோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்போட ஊடக பிரிவு பொருப்பாளரான வன்னி அரசுக்கு தெரிஞ்சிருக்கு. புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி பன்னாற்று கைதாகி ஜாமீன்ல வந்தாரே அதே 'வன்னி'தான் உடனே சுப. வீரபாண்டியன். சினிமா இயக்குனர் சீமான். உள்ளிட்ட பலருக்கும் தகவல் பரவிடுச்சு. அப்புறம் என்னது. திபுதிபுன்னு ஒரு ஆயிரம் தமிழ் பற்றாளர்களோட சுபவீ. சீமான், வன்னியரசு உட்பட பெரிய டீமே 'ஜெமினி' கலர் லேடிபுக்கு போயிருக்கு.

அந்த சிங்கள டைரக்டர்கிட்ட 'எங்க இனத்துக்கு எதிரா படம் எடுத்துட்டு, எங்க மண்ணுலேயே வந்து இந்த வேலைய செய்ய எப்படி துணிச்சல் வந்துச்சுன்னு ஓட ஓட விரட்டி தர்ம அடியா போட்டு தாக்கிட்டாங்க. சிங்கள டைரக்டரோட சட்டதுணி எல்லாம் கிழிஞ்சுடுச்சு. அவரு உயிர் பயத்துல 'அய்யோ, அய்யோ'ங்கிறத மட்டுமே தமிழ்ல கத்தினப் பாத்து, போனாப் போகுதுன்னு 'அடி'ய விட்டுட்டு அவரை தூக்கிட்டு வந்து ஒரு சேர்ல குந்தவச்சு முகத்துல தண்ணியடிச்சு கழுவிட்டு 'இந்த மாதிரி இனிமே செய்வியாடான்னு' திரும்பவும் ரெண்டு தட்டு தட்டியிருக்காங்க. அய்யோ சாமிங்கள சிலோன்லதான் 'புலிகள்' இருக்கான்னு நினைச்சேன் இங்கேயும் இருப்பீங்கன்னு தெரியாது நான் உங்க கேப்டன் பிரபாகரனுக்கு எதிராவோ, தமிழர்களுக்கு எதிராவோ படம் எடுக்கவே போராளி குழுவுல ஒரு சின்ன பையனா வர்றவருக்குதான் 'பிரபாகரன்'னு பேரு அதையே படத்துக்கு பேரா வச்சுட்டேன். மத்தபடி ஒரு தப்பும் செய்யலேன்னு கதறி அழுதிருக்காரு.

இதுக்குள்ள நிறைய போலீஸ் உள்ள வந்துருச்சு. அவரை மீட்டு பாதுகாப்பா ஒரு அறைக்கு கொண்டு போய் வச்சாங்க. நம்ப 'டீம்' விடவில்லை. பதில் சொல்லுடான்னு அங்கேயும் போய் வம்படிச்சாங்க. பிறவு போலீஸ் மத்தியில வச்சுகிட்டு சுப.வீ. அந்த சிங்கள டைரக்டர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.

இறுதியா தமிழ் தலைவர்களான பழ. நெடுமாறன், டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பலரை கூட்டி வச்சு அந்த 'பிரபாகரன்' படத்தை 27_ந் தேதி காலையில பதினோரு மணிக்கு போட்டு காட்டணும். போராளிகளுக்கோ தமிழர்களுக்கு படம் எதிரா இருந்தா தமிழ் டப்பிங், பிரிண்ட் போடுற எந்த வேலையும் செய்யக் கூடாது (அப்படி செய்தா படச்சுருளையே கொலுத்திடுவோம்னு வேற சொன்னாங்க). அப்படியே அந்த பெட்டிய தூக்கிட்டு அடிபடாம சிங்களத்துக்கு ஓடிப்போயிடனும். அனுமதி கிடையாது. நல்லபடியா இருந்துச்சுன்னா நீ செய்யுற வேலைய தாராளமா செய்துக்கிடலாம்னு'' அந்த டைரக்டர் கைப்பட எழுதி வாங்கிட்டு, அந்த 'பிரபாகரன்' சிங்களபடத்தை ஒரு வெட்டுக்குள்ள போட்டு மூடி சில வச்சுட்டுத்தான் வெளிய வந்தாங்க.''

அடடே அப்புறம் என்னாச்சு _ அன்வர்பாய்.

''அதான் முதலிலேயே உதைச்சுட்டுங்களே. பிறவு ஏதும் நடக்கலை. சமாதானமா வெளியேறிட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அந்த சிங்கள டைரக்டர் சட்டை துணி எல்லாம் கிழிஞ்சி கிடந்தாரில்ல. அத பாத்துட்டு தமிழ் உணர்வாளர்கள் பாவப்பட்டு, உடனே பக்கத்துல இருந்த துணிக் கடைக்கு ஓடி டைரக்டரோட சைஸுக்கு ஒரு டி.சர்ட் வாங்கி வந்து போட்டுக்க வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா, போலீஸ், பத்திரிக்கைக்காரங்கன்னு வந்து பார்க்குறப்போ, சட்டைகிழிந்து பரிதாபமா இருந்தா நல்லாருக்காது இல்ல அதான்'' என்றார் சிரித்தபடியே.

சபை களைகட்டும்.
ஒட்டுக் கேட்டவர் :
பா. ஏகலைவன்

குமுதம்.காம்

வியாழன், மார்ச் 13, 2008

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.

Source: http://english.pravda.ru/science/mysteries/104375-0/

ஞாயிறு, மார்ச் 09, 2008

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது; நிபுணர் குழு அறிக்கையில் தகவல்!!!

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவும் சேது சமுத்திர திட்ட பணியில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை தொடர்ந்து ராமர் பாலம் அமைந்துள்ள பகுதிகளில் திட்டப் பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலம் பற்றி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு புதிய மனுவை தயாரித்தது.

சேது சமுத்திர கால்வாய் திட்ட பணி குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ராமர் பாலம் மனிதனால் உரு வாக்கப்பட்டது அல்ல, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவின் பொருளா தாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறி விக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் இந்த நிபுணர் குழு அறிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் பற்றி விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதை பாது காக்கப்பட்ட புராதன சின்னங் கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராமச்சந்திரன் தலை மையிலான நிபுணர் குழு அறிவித்துள்ளது.

ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பணிகளை மேற் கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.
நன்றி:-லங்கசிறீ
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us