தமிழக தொலைக்காட்சிகளை யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பு செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒளிபரபாகும் மக்கள் தொலைக்காட்சிக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுவரும் அழிவுகளை மக்கள் தொலைக்காட்சி மட்டுமே பெரும்பாலும் காண்பித்து வருக்கின்றது. வன்னியில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்களை மக்கள் தொலைக்காட்சியே தொடர்ச்சியாக காண்பித்து வருகின்றது.
இது யாழ்குடா மக்களை சென்றடையாது தவிர்ப்பதற்கு படையினர் இந்தத் தடையை விதித்துள்ளனர். இத் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்குபவர்களுக்கும் வழங்கக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
முன்னதாக வவுனியாவிலும் இவ்வாறான உத்தரவை படையினர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கலைஞர் ரிவி, ஜெயா ரிவி, சண் ரிவி, மக்கள் தொலைக்காட்சி என்பன ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
நன்றி:- சங்கதி