ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்களாலும் தாக்கினார்கள். நாற்காலிகளை தூக்கி இந்தியர்களை அடித்தனர்.
இந்தியர்கள் உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள்.உயிர் தப்ப அருகில் உள்ள அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டனர். அந்த கலவரக்கும்பல் விடவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இந்தியர் அடித்து உதைத்தனர்.
போலீசார் பெரும்பாடுபட்டு வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.
இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி தாக்குதலில் 8 இந்தியர்கள், 2போலீசார் காயம் அடைந்தனர்.
லங்காசிறியில் இருந்து............