பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது.
புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சுற்றுப்புற சுழல் நிபுணரான மகேஷ் ரங்கராஜன், விஞ்ஞானிகளின் இந்தக் கருத்து அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் எனக் கூறினார். மேலும் புவியின் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு விதமான நடைமுறையை, திட்டமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நன்றி:- bbc.com