சனி, ஜூன் 02, 2007

இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பம்.

டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது


ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்பைடர்மேன்-3 இதுவரை இந்தியாவில் 57 கோடிகள் வசூலித்துள்ளது. இது டைட்டானிக் திரைப்படத்தின் இந்திய வசூலை (55.5 கோடிகள்) விட அதிகம். இன்னும் இப்படம் சில கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெகா வசூல் காரணமாக ஹாலிவுட் சினிமாவின் டாப்-10 மார்க்கெட் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிமாவின் ஆக்டபஸ் கரங்கள் இந்திய சினிமா வர்த்தகத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதற்கான அறிகுறியே ஸ்பைடர்மேன்-3யின் இந்த வெற்றி.

கோக், பெப்ஸியின் வருகை உள்ளூர் காளிமார்க், கடாமார்க்களை விழுங்கியதுபோல் சினிமாவிலும் நிகழுமா? அவசரமாக அலசப்பட வேண்டிய பிரச்சனை இது!
cinesouth.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us