புதன், அக்டோபர் 24, 2007

கமல்ஹாசனின் இறுதி எச்சரிக்கை!!!


எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன் சில வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன், ஆர்குட் டாக்டர் கமல்ஹாசன் கம்யூனிட்டி என்ற அமைப்பும் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.

எனது ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் நற்பணிகளில் ஈடுபடுத்திவரும் முயற்சிகளுக்கு இவர்கள் செயல் ரீதியான விரோதிகளாகின்றனர்.

எனது வெளிவரவிருக்கும் படங்களையோ, எனது வெளிவராத, வந்த படங்களையோ விலை பட்டியலிட்டு விற்கும் (எனது படங்கள் அச்சிட்ட டி.சர்ட் உள்பட) உரிமையை நானோ அல்லது எனது தயாரிப்பாளரோ இவர்களுக்கு வழங்கவில்லை.

அரசியல் மற்றும் வியாபாரத்தை நற்பணி இயக்கத்தில் ஊடுருவ விடாமல், இதுவரை காத்து வருகிறேன். இனியும் இக்காவல் தொடரும்.

எனது அனுமதியின்றி செயல்படும் இவர்களுக்கு எந்த ஒத்துழைப்பையும், நமது நற்பணி இயக்கங்களும், எனது உண்மையான ரசிகர்களும் வழங்கத் தேவையில்லை.

இதுவரை இவர்கள் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களில் என்னுடைய அனுமதியின்றி விற்பனையில் இறங்கிய செயலுக்கு நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தரப்பிடம் விசாரித்தபோது, இப்போதைக்கு இந்த அறிக்கையைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளின்போது செய்தியாளர்களை கமல் சந்திக்கவுள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

- தட்ஸ்தமிழில் இருநு..........
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us