புதன், பிப்ரவரி 20, 2008

வைரமுத்துவிடம் 52 கேள்விகள்.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை?

தமிழ்

இப்போது 50kg. தாஜ்மகால் யார்?

சானியா மிர்சா

காதல் என்பது?

காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு.

பிடித்த நிறம்?

வெள்ளை



பச்சையப்பன் கல்லூரி?

மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது.

கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக?

பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்;

ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி
உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா _ பாரதிராஜா?

மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள்.

வேட்டி பிடிக்காதா?

காலைப் பிடிக்கும்.

தம்பி...?

உடையான் படைக்கு அஞ்சான்

ரஜினி?

நடிகர்களில் ஓர் அறிவாளி

கமல்?

அறிவாளிகளில் ஒரு நடிகர்

பொன்மணி?

மனைவியாய் வந்த கடவுள்

பெரியார்?

செயற்கரிய செய்தார்.

அண்ணா?

கவிஞர்களை உருவாக்கிய உரைநடையாளர்

சின்ன வயதில் கடவுள் பக்தி உண்டா?

கோயிலுக்குப் போனதுண்டு. பக்தி மட்டும் வந்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?

துணிச்சல்

முதல் பாடல்?

பொன்மாலைப் பொழுது

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?

காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா!

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?

நேரம் குறித்த பிரக்ஞை இன்மை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)

பி. சுசீலா

காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?

கல்யாணம் செய்து காதலைத் தோற்கடிப்பது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?

சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தங்கமாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; நகையாவாய்

நாகேஸ்வரராவ் பூங்கா என்றதும் நினைவுக்கு வருவது?

‘‘இலை’’ என்ற கவிதைக்குக் கருப்பொருள் தந்தது.

ஷங்கர் _ மணிரத்னத்துக்கு மட்டும் கலக்குகிறீர்களே?

இல்லை; அவர்களே கலக்குகிறார்கள்

தென்றல், மலர், நிலவு, பனித்துளி, பெண், ஆண் _ உடனே கவிதை எழுதத் தூண்டுவது?

பனித்துளியும் _ பெண்ணும்

சென்னையில் பிடித்த இடம்?

சென்ட்ரல் ரயில் நிலையம்

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?

வியப்பது உழைப்பை

ரசிப்பது நகைச்சுவையை

வைகோ?

அரசியலில் இலக்கியம் கலப்பவர்

இலக்கியத்தில் அரசியல் கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?

நண்பர் யார் என்று தீர்மானித்துக் கொள்வது _ திரைப்பட வெற்றி

எதிரி யார் என்று தீர்மானித்துக்கொள்வது _ அரசியல் வெற்றி.

அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

கபிலன் இன்னொரு வைரமுத்து ஆவாரா?

ஒரு வைரமுத்துவையே சிலபேர் ஜீரணிக்க முடியாதபோது, கபிலன் கபிலனாகவே இருக்கட்டும்.

ராஜா _ ரகுமான் ஒப்பிடுங்கள்?

அவர் ஆர்மோனிய அரசர்;

இவர் ‘‘கீ போர்டு கிங்’’

திரைப்பாட்டு _ கவிதை எழுதுவதில் எது பிடிக்கும்?

திரைப்பாட்டில் கவிதை எழுதப்பிடிக்கும்

உங்கள் மனதில் பதிந்த கவிதை வரி?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

திருவள்ளுவரைப் பற்றி?

தமிழர்களின் ஞான அடையாளம்

கம்பர்?

தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் உச்சம்

இளங்கோவடிகளைப் பற்றி?

தமிழைத் துறக்காத துறவி

கண்ணதாசன் உயிரோடு வந்தால் என்ன கேட்பீர்கள்..?

வனவாசத்தில் விட்டுப்போன பகுதிகளை,

கவிஞர்களில் கூட ஆண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது?

பெண்ணாதிக்கம் உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

அடிக்கடி வாசிக்கும் தமிழ் இலக்கியம்?

முத்தொள்ளாயிரம்

புதிய இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள்..?

பாலா _ சரண் _ செல்வராகவன் _ தரணி _ அமீர்.

தமிழ் நாட்டில் பிடித்த ஊர்

கொடைக்கானல்

பா. விஜய்க்கு விருது கிடைத்தது பற்றி....

தமிழின் பெருமை தொடர்கிறது

பெண் குழந்தை இல்லை என்ற ஆதங்கம் உண்டா?

ஷெமினியின் கடைசிப் படுக்கையருகே என்னை அழைத்துச் சென்ற டாக்டர் கமலா செல்வராஜ், கண்கலங்கி அழுதபோது ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

இதிகாசங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?

பேயத்தேவர்.

ரசிக்கும் சிற்பம்..?

கண்கள் மூடிய புத்தர் சிலை

வித்யாசாகர் விருது பெற்றது பற்றி...

தன் தாய்மொழியான தெலுங்குப் படத்திற்கு தேசிய விருது பெற்றவர்,

தந்தை மொழியான தமிழிலும் விருது பெறுவார்.

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்...

ஆண் : மீசை முத்தம் வேண்டுமா;

மீசை இல்லாத முத்தமா?

மீசை முத்தம் என்பது பெண்ணே

நான் உனக்குத் தருவது

மீசையில்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது (கலைஞரின் பாசக்கிளிகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களே ஏன்?

எனக்குத் தொடர்பு அரசியல் கட்சிகளோடல்ல _ தலைவர்களோடுதான்.

சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்...?

சரோஷா தேவி : கட்டழகு

தேவிகா : கண்ணழகு

பத்மினி : பெண்ணழகு

குஷ்பு : முகத்தழகு

சிநேகா : சிரிப்பழகு

த்ரிஜா : முழுஅழகு

இன்றைய தலைமுறைக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?

திறந்தவெளியில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?

தண்ணீரைக்கூடச் சல்லடையில் அள்ளலாம்

அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்.

குமுதம்-
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us