திங்கள், பிப்ரவரி 20, 2006

கவிதைக் காதல்


காதல் என்பது இயற்கையானது
அது எல்லோருக்கும் சொந்தமானது!
எனது காதல் மாறுபட்டது
மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!
என் காதலியின் இளமை மறைவதில்லை
எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!
எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது
அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!
அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்
இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!
அவள் தேவர்குல தாசியுமல்ல
பூவுலக மாதவியுமல்ல!
அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்
அவன் சரியான வம்பன்!
கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு
கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!
பாரதி அவளுக்கொரு தாசன்
பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!
வாலி போடுவார் அவளுக்கு வேலி
முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!
அவளே என்றும்
எனது பெரிய சொத்து!
அவளை வரையும்போது
சிலிர்க்குது எனது சித்து!
அவளே கவிதை நாயகி
எனது காதல் நாயகி.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us