சனி, நவம்பர் 22, 2008

என்னை அடித்தவன்!!!


என்னை அடிதவனுக்கும் நான் ஆயுத உதவிகள் செய்வேன்.

"இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண நன்நயம் செய்துவிடல் நன்று."
இவன் தேசியவியாதி.

புதன், நவம்பர் 05, 2008

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன்



ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில், தன்னுடைய பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதியை என் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும் பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளை யில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.

10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம் இன்னும் முழுமை பெறாத நிர்மாணப் பணி. அதற்குப் பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம்.
மத, ஜாதி, இன, மொழி, நிற வேறுபாடுகளைக் கூறி நம் இனத்தையே கூறுபோட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்து விட்டது.

அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழ்ந்த அவலம் தான் ஈழப்போரும் கூட. இலங்கை நமது அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்தக் கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது.

இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை.மனிதனே மனிதனைக் கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.

இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.

இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில் நம் வீட்டில் குதூகலக் கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இராது.

வழக்கமாக நான் பிறந்ததைக் கொண்டாடும் இத்தினத்தை நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் சொல்லும் நாளாகச் செலவிடுங்கள்.

நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று இதுவாகவும் இருப்பின் பெருமை கொள்வேன்.
இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறினார்.

நன்றி:-தமிழ்வின்

திங்கள், நவம்பர் 03, 2008

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியாவின் நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவது சிறந்தது

இலங்கைத் தமிழர் பிரச்சி;னை தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் மேலும் அதிகமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இலங்கையில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் மர நிழல்களில் தங்கியுள்ளனர். இது தொடர்பான குறுந்தகடுகள் தமிழகத்தில் பலருடைய பார்வைக்குக் காட்டப்பட்டுள்ளன.

அக்டோபர் 2-ம் திகதி இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் தமிழகத்தில் வேகமடைந்தன.

அக்டோபர் 14-ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த, மத்திய அரசு அடுத்த 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கெடு கடந்த 28-ம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில் இந்திய, மத்திய அரசின் முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என தமிழக பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்: தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், திரைத் துறையினர், வணிகர்கள் என எல்லோரும் தந்த அழுத்தம் காரணமாகத்தான் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.

தமிழர்களைத் தாக்கினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, தற்போது தமிழக மக்களும், இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் எழுந்த எண்ணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பயப்படுவாரா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவும்போது மகிந்தவின் தைரியம் குறையும் எனவும் கூறியுள்ளார். இதனால் இலங்கை ஜனாதிபதியின் மனதில் மாற்றங்கள் ஏற்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உணவு, மருந்துப் பொருள்களும் நிவாரண நிதியும் இலங்கை அரசு மூலமாக அனுப்பப்பட்டால் தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு இருக்குமா என கேட்டதற்கு, அது சாத்தியமற்றது என சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மூலம் அனுப்பினால் அந்த உதவிகள் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும் எனவும் இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்துக் கொளுத்திவிடுவதோ சிறந்தது எனக் கூறிய சிவாஜிலிங்கம், இது குறித்த உண்மை நிலைமையை தமிழக அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விளக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. அவர்களுடைய தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் இது இருக்கும். தற்போது, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் தமது பகுதிக்குள் நுழையவிட்டுள்ளனர். பின்னாளில் என்ன நடக்கும் என்பது தெரியாது. போரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக இராணுவம் சார்பில் வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாதான், காட்டுக்குள் இருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் பற்றி இராணுவத்துக்குத் தகவல் சொல்கிறார் என்ற கேள்விக்கு விடையளித்துள்ள சிவாஜிலிங்கம், கிழக்குப் பகுதியில் உள்ள தகவல்கள் மாத்திரமே கருணாவுக்குத் தெரியும் எனவும் அதுவும் பழைய தகவல்களாகத்தான் இருக்கும் எனவும், புதிய மாற்றங்கள் பற்றி கருணாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசு இன்னும் தீவிர அக்கறை காட்டுவதற்காக, அங்குள்ள நிலையை நேரில் விளக்குவதற்காக இந்திய பிரதமர், காங்கிஸ் தலைவி சோனியா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவுத் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilskynews.com/
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us