சனி, டிசம்பர் 24, 2005

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை

மீண்டும் பிறந்து வா

அண்ணா பரராஜ சிங்கமே
சிங்களப்படைகளின் கூலிகளால்
அனியாயமாக வீழ்ந்தாயே!
நியாயம் வாழவேண்டும் என
நீதியின் முன் எமக்காக
வாதாடிய எம் தங்கமே!
பாலன் பிறக்கும் நாளில்
பாதகர் காத்திருந்து
உம்மை சரித்தனரே!
அகிம்சை வழியில்
அழிவு வராதென
இறுமாந்து இருத்தாயா?
ஜயா இது ஜேசுவையே
காட்டிக் கொடுத்த
உலகம் ஜயா!
பாலனின் கோவிலில்
வைத்து உன் கதைமுடித்து
நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்!
பாலன் பிறந்த நாளில்
இறந்தாயே மீண்டும் பிறந்துவா
ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா.

9 கருத்துகள்:

Kanags சொன்னது…

அமரருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

தமிழ்வாணன் சொன்னது…

மட்டக்களப்பு மண்ணின் ஒரேயொரு மூத்த தமிழ் அரசியல்வாதி கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் நத்தார் தின ஆராதனையின்போது ஆலயத்துக்குள் வைத்து சுடப்பட்டமை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அமைதியான வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த மாமனிதர், பிரார்த்தனையின்போது கொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் இக்கட்டான நெருக்கடியை சந்தித்தபோது, தனது மண்ணுக்காக உறுதியோடு ஓரணியில் நின்று செயற்பட்டார்.

அவருக்கு அஞ்சலிகள்.

ENNAR சொன்னது…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்

ENNAR சொன்னது…

கருணா கோஷ்டி விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் தனியாக பிரிந்து சென்ற கருணா கோஷ்டிதான் இந்த தாக்குதலை நடத்தியிருப் பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டணி, பிரபாகரன் தலைமையில் ஆன விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதை கருணா கோஷ்டி எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழனை தமிழன் தான் கொன்றானா? எது உண்மையோ? கர்த்தருக்குத்தான் தெரியும்

பெயரில்லா சொன்னது…

செயல்வீரருக்கு வீர அஞ்சலிகள்..!

Vishnu சொன்னது…

Vanakkam Birunthan..

ungal blog inikku than 1st time paarkkiren. alakaana aakkankalaal alankariththu irukkiringa...

ஜோசப் பரராஜசிங்கம் iyaa vai ninaivu kurnthu eluthiya aakkam... manathil vethanaiyai etpaduththiyathu. ellorukkum oru thuyaramaana seithiyaaka thaan amainthathu.

melum ungal aakangalai ethir paarkkiren

nanri

Vishnu

இளந்திரையன் சொன்னது…

தமிழ் இனத்துக்கான சாபக் கேட்டின் தொடர்ச்சி..இதுவே முடிவுப்புள்ளியாக வேண்டுமென்பதே எல்லோரதும் பிரார்த்தனையாகட்டும்...

உங்கள் கவிதகள் அருமை....

பிருந்தன் சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை, காலத்தால் அழியாதவர்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us