சனி, டிசம்பர் 31, 2005

எனது புதுவருட உறுதிமொழி

நான் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பேன். அது என்னவாகிலும் இருக்கலாம். அதன் படி நடக்கவேண்டும், அதனை நடத்திமுடிக்க வேண்டும் என்று, வருட ஆரம்பத்தில் நினைத்து உறுதிமொழி எடுப்பேன். ஆனால் வருட இறுதிக்குள் அது என்னை பாடாய்படுத்தி, முடிக்கவிடாமல் செய்து விடும். என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.

ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.

அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

9 கருத்துகள்:

thamillvaanan சொன்னது…

அன்பின் பிருந்தன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.//

அப்படியானால் என்ன நடக்ககூடாது என நினைக்கிறீர்களோ அதனையே உறுதிமொழியாக எடுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும். எப்படி? :)

அன்புடன்
தமிழ்வாணன்

பிருந்தன் சொன்னது…

வணக்கம் தமிழ்வாணன், அதனால்தான் இந்தவருடம் இப்படி ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். எப்படியாவது ஒரு உறுதிமொழியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதிப்பாடுதான்,
அது சரி உங்க உறுதிமொழியைபற்றி சொல்லவே இல்லையே?

ஞானவெட்டியான் சொன்னது…

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

இளந்திரையன் சொன்னது…

இது ரொம்ப்ப...... நல்ல உறுதி மொழிதானுங்கோ....

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பிருந்தன் சொன்னது…

ஞானவெட்டியான், இளந்திரையன் இருவருக்கும் புத்தாண்டு வாழத்துக்களும் நன்றிகளும்.
இளந்திரையன் உங்கள் இறுதியாக எழுதிய கட்டுரைக்கும் பின்னூட்டமிட முடியவில்லை என்ன வென்று பாருங்கள். நட்டசத்திரத்தையும் போட்டால் உங்கள் ஆக்கங்களை தவறவிட்டவர்கள் பின்னர் பார்ப்பார்கள், முயற்சித்துப்பார்க்கவும்.

ENNAR சொன்னது…

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்

பிருந்தன் சொன்னது…

நன்றி எர்மர், உங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இளந்திரையன் சொன்னது…

இப்பொழுது முயற்சி செய்து பாருங்கள்..... நாங்க ஊருக்குப் புதிசுதானே அதான் ரொம்ப்ப பேஜாராக்கீது.....

-அன்புடன் இளந்திரையன்

பிருந்தன் சொன்னது…

இளந்திரையன், உங்கள் வாழ்க்கையின் மொழி என்ன கட்டுரைக்கு பின்னூட்டம் இடும் லிங் வரவில்லை, ர்ன்ன வென்று பாருங்கள், சிலவேளை பின்னூட்டமிடும் செற்றிங்கில் அனுமதிக்கப்படாதிருக்கலாம்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us