ஞாயிறு, ஜனவரி 01, 2006

புத்தம் புதிய ஆண்டே! புத்தாண்டே!

புத்தம் புதிய ஆண்டே புத்தாண்டே
புதிதாய் இன்று பிறந்தாய்!
பூமியில் வாழும் மனிதர் நமக்கு
புதிதாய் என்ன கொண்டு வந்தாய்!
புழுதியில் வாழும் எமக்கு
புனிதம் கொண்டு வருவாயோ!
துன்பம் நித்தம் சுமந்த எமக்கு
இன்பம் கொண்டு வருவாயோ!
அடிமை வாழ்வை உடைத்து
விடுதலை கொண்டு வருவாயோ!
நித்தம் நித்தம் செத்து மடிந்தவர் வாழ்வில்
நிம்மதி கொண்டுவா! நிம்மதி கொண்டு வா.

4 கருத்துகள்:

vasi சொன்னது…

இனிய புதுவருட வாழ்த்துகள் பிருந்தன்

பிருந்தன் சொன்னது…

வசி உங்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா சொன்னது…

பிருந்தன்,
புத்தாண்டு முடிந்து தமிழர் நாள் வந்தாச்சு :-)
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us