வெள்ளி, டிசம்பர் 02, 2005

புலிவாழ் குகை


செருக்களம் சென்ற தன் வேங்கை
மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான்
எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி,
மறு பிள்ளை இல்லையே
போர்க்கனுப்ப எனக்கென்று
தவித்தழுதாள் அன்று,
தன்பிள்ளை போர்க்களத்தில்
வீரமரணம் அடைந்தான்
என்ற செய்தி கேட்டு,
வீனே அழுது புலப்பாது
மறு பிள்ளை எனக்கில்லை இதோ
நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே,
தருக்கர் பகை முடிக்க
செருக்களம் நோக்கி விரையும்
புலிவாழ் குகையே நிவிர் வாழி.

7 கருத்துகள்:

தமிழ்வாணன் சொன்னது…

வணக்கம் பிருந்தன்
உங்களுடைய வலைப்பூவைப்பற்றி நேற்றுத்தான் அறிந்துகொண்டேன். அனைத்து பதிவுகளும் நன்றாக இருக்கின்றன. ஆனால் வலைப்பூவின் சட்டப்படல் தான் "கருமையாக" இருக்கிறது. கவனத்தில் கொள்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்.

தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன்
அன்பின்
தமிழ்வாணன்.

அனிதா... சொன்னது…

வணக்கம் பிருந்தன் அண்ணா..
இந்த படத்தை பார்த்து நீங்கள் எழுதிய கவியும் அருமையாக இருக்கு ..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்

நன்றி...
அனிதா..

பிருந்தன் சொன்னது…

நன்றி தமிழ்வாணன், அனிதா உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

ரூபா. சொன்னது…

வாழ்த்துக்கள் பிருந்தன்.

தமிழினி சொன்னது…

அடடடே நம்மட உறவுகள் எல்லாம் புலொக்கில நிக்கினம் இன்று தான் கண்டேன். நல்ல பதிவுகள் எல்லாம் போடிறியள். தொடருங்கள் பிருந்தன்.

பிருந்தன் சொன்னது…

நன்றி ரூபா, தமிழினி உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us