திங்கள், ஜூலை 02, 2007

`நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை!!!

அமெரிக்காவின் மிகப் பிரமாண்டமான போர்க்கப்ப லான `நிமிட்ஸ்' சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பல் 90 விமானங்களை சுமந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 போர் விமானங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் அணு ஆயுதங்களும், நீண்ட தூரத்துக்கு பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் இருக்கின்றன.இந்த கப்பலில் உள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று சர்ச்சை கிளம்பியது.

ஆனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டிருப்பதால் நிமிட்ஸ் கப்பல் சென்னை வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நிமிட்ஸ் கப்பல் இன்று பகல் சென்னையில் இருந்து சுமார் 100 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. நாளை (திங்கள்) அதிகாலை 6 மணிக்கு நிமிட்ஸ் சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கடல் மைல் (3.7 கி.மீ.) தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும். நிமிட்ஸ் கப்பலுக்கு துணையாக பிக்னி என்றொரு போர்க்கப்பலும் வருகிறது.

இந்த 2 கப்பல்களிலும் சேர்த்து 450 உயர் அதிகாரிகள் உள்பட சுமார் 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் 5-ந்தேதி வரை சென்னையில் இருப்பார்கள். அப்போது சமூகசேவையில் ஈடுபடுவார்கள்.

சுற்றுலா செல்வதோடு, ஷாப்பிங் செல்லவும் அமெரிக்க வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடற்படை, சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் மற்றும் சென்னை போலீசார் ஒருங்கிணைந்து விரிவாக செய்துள்ளனர்.

அமெரிக்க வீரர்கள் நாளை முதல் 5-ந்தேதி வரை 4 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருப்பார்கள். மொத்தம் உள்ள 5450 வீரர்களில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்ஸ்களிலும் தங்க வைக்கப்படுவார்கள்.

3, 4-ந்தேதிகளில் அமெரிக்க வீரர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப் படுவார்கள். இந்திய கடற்கரை அதிகாரிகள் அவர்களுக்கு துணையாக செல்வார்கள். சென்னை போலீசின் அதிரடிப்படை வீரர்கள் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.

ஜுலை 4-ந்தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தினமாகும். அன்றைய தினத் தன்று, சென்னையில் தங்கி இருக்கும் அமெரிக்க வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வீரர்கள் எந்தெந்த பொழுதுபோக்கு மையங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. கிழக்கு கடற்கரைசாலை, மகாபலி புரம், கோவளம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க வீரர்கள் செல்வார்கள்.

இதற்காக தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தங்கி புத்துணர்ச்சி பெறும் நோக்கத்தில் அமெரிக்க வீரர் கள் வருகின்றனர். எனவே அமெரிக்க வீரர்களை குதூ கலப்படுத்தும் வகையில் ஏராளமான விசேஷ ஏற்பாடு களை இந்திய கடற்படை செய்துள்ளது.

இதற்கிடையே நிமிட்ஸ் கப்பலில் இருந்து கதிர்வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறி விக்கப்பட்டுள்ளது. என்றாலும் நிமிட்ஸ் அணு கதிரியக்கம் பற்றிய சர்ச்சை எழுந்ததால் நிமிட்ஸ் கப்பல் சென்னையில் இருக்கும் 4 நாட்களும் அடுத் தடுத்து பாதுகாப்பு சோதனை களை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

6 இடங்களில் சோதனை மையம் உருவாக்கப்பட்டுள் ளது. நிமிட்ஸ் கப்பலில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் இந்திய கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கும். இதில் ராணுவ ஆய்வு நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி நிமிட்ஸ் கப்பலை சுற்றி உள்ள கடல் நீரை சோதனை செய்து பார்ப்பார்கள்.

சென்னை துறைமுகத்தில் 3 சோதனைக்கூடங்கள் உருவாக் கப்பட்டு இருக்கிறது. அவர்கள் காற்று, தண்ணீரை பரிசோதித்து கதிர்வீச்சு ஏதேனும் உள்ளதா என்று உறுதி செய்வார்கள். இவை தவிர சென்னை கடலோரப் பகுதியில் 2 வேன்கள் ரோந்து சுற்றி வரும்.

அந்த 2 வேன்களிலும் நவீன ஆய்வுக்கூடம் உள்ளது. இந்த நடமாடும் வேன்கள் மூலமாக கடற்காற்று சோதித்து பார்க்கப்படும். நாளை காலை முதல் இந்த வேன்கள் சென்னை கடலோரத்தில் ரோந்து சுற்றி வரும்.

கதிர்வீச்சு சர்ச்சை எழுந் துள்ளதால் நிமிட்ஸ் கப்பலில் இருந்து பொருட்களை இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு இரவில் நகர்ந்து செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிமிட்ஸ் கப்பலை நாளை காலை முதல் சென்னை மக்கள் கடற்கரை பகுதியில் இருந்து பார்க்க முடியும்.

மாலைமலரில் இருந்து.........

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சென்னையில் தங்கி புத்துணர்ச்சி பெறும் நோக்கத்தில் அமெரிக்க வீரர் கள் வருகின்றனர்.:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

பெயரில்லா சொன்னது…

ஈராக் அப்பாவி மக்களை கொண்றவர்களுக்கு தமிழ்நாட்டில்புத்துணர்சி அழிக்கப்படுகிறது, இந்திய அரசினால் தமிழகம் மானங்கெட்ட வேலைகளை செய்யவேண்டி இருக்கிறது. என்ன கொடுமை சார் இது.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us