வீதி எங்கும் சடலம்
எத்தனை போர் எடுப்பு படலம்!
உருண்டு செல்லும் தலைகள்
பிணங்களால் எத்தனை மலைகள்!
தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்
இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!
சிதறிய கண் துடிக்குது
அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!
எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்
எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!
திடீர் திடீரென பெரும் இடிகள்
இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!
விமானங்கள் கூட போடுது குண்டு
எம் தலைகளை சரியாகக் கண்டு!
எதற்கு இந்த வெறி ஆட்டம்
பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!
எமது மண்ணை தனதாக்க
நடக்குது யுத்தம்!
இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்
எமக்கு மரணப்போராட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக