வெள்ளி, செப்டம்பர் 28, 2007

'சன்'னை முந்திய 'கலைஞர்'!

திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

கலைஞர் டிவிக்கு 10க்கு 9.35 பாயிண்டுகள் கிடைத்துள்ளன. சன் டிவிக்கு 4.64 புள்ளிகளே கிடைத்ததாம். விஜய் டிவி 3வது இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்த ரேட்டிங் 0.75 ஆகும். ராஜ் டிவி (0.62), ஜெயா டிவி (0.54), கே டிவி (0.35) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சன் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு தமிழ் சானலிடம் முதலிடத்தை இப்போதுதான் பறி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்துள்ள கலைஞர் டிவி போகப் போக சன் டிவியை மேலும் அதிர வைக்கும் எனத் தெரிகிறது.

-தட்ஸ் தமிழ்

3 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

உலகளாவிய வீச்சைக் கொண்டது
சன்-டிவி. அப்படியிருக்க இந்த
'ரேட்டிங்' எல்லாம் எப்படி எடுக்கிறார்களோ, தெரியவில்லை.
மற்றும், சினிமாவைப் போலவே தான் டிவி சேனல்களும்.
சில பார்முலாக்களுக்குப்பழக்கப்பட்டுப் போய், 'இதையெல்லாம் தான் மக்கள் விரும்புகிறார்கள் போலிருக்கிறது' என்று 'பல அய்ட்டங்களுக்கு'பழக்கப்பட்டு போய்,
முந்தைய வெற்றி பெற்ற சேனல்களின்
'ஜெராக்ஸ்'காப்பியாகவே, மாறிப்
போதல் உண்டு.புதுப்புது சோதனைகளைச் செய்ய இங்கு யாருக்கும் ஆர்வம் இருப்பதாகத்
தெரியவில்லை. அதனால் தான்,
ஆரம்பத்தில் சுருப்பு சுருப்பு காட்டும்
எல்லாமே, பத்தோடு பதினொன்றாக
மாறிப் போகின்றன..இதில் எந்தச்
சேனலைப்பார்த்தால் என்ன..எல்லாம்
ஒன்றுதான்.
இது பத்திரிகைகளுக்கும் பொருந்தும்.
இன்னொன்றைப் பார்த்து தானும்
அதுபோலவே மாற்றிக்கொள்ளும்
நெளிவு சுளிவுகள் இங்கும் உண்டு.
அவர்கள் இலட்சியமெல்லாம் அதிக
விற்பனை, அவ்வளவு தான்!

பெயரில்லா சொன்னது…

I hope we get Kalignar TV here in USA soon.

Ravi

மாயா சொன்னது…

முதல் நாளென்றதால் தான் அப்படி . . . . .


:))

இலங்கையில இப்பதான ஒளிபரப்பாகத்தொடங்கியிருக்கு
இடக்கிடை பார்ப்பதுண்டு நிகழ்ச்சி எல்லாம் மற்றய சனல்களின் பிரத்திதானே

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us