அது உன் கழுத்துக்கு சுருக்கு!
குடிப்பதால் உனக்கு மட்டும் இன்பம்
உன்கூட இருப்பவர்களுக்கு துன்பம்!
குடித்தபின் உனக்கு வெறி
அதற்க்கு தொட்டுக்கொள்ள வேண்டும் கறி!
குடியரக்கன் குறித்துவிட்டான் தேதி
உனக்கு தெரியுமா இச்சேதி!
குடிப்பவர்களே அதனை நிறுத்து
இல்லையெனில் கால்களை போடுவேன் முறித்து!
உனது அழகு எங்கோடிப்போனது
இன்னமும் வேண்டுமா உனக்கு அது!
நடுரோட்டில் நீ வீழ்ந்துகிடந்தால் அவமானம்
இதற்க்கு மேலும் உனக்கு இருக்குதோ மானம்!
வருங்கால குடிமகனே கேள்
உனது சந்ததி அழிவதைப் பார்!
போதும் உனக்கு கள்ளச்சாராயம்
செய்து அலுத்து விட்டேன் பிரச்சாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக