அதனுடன் கொசுறாக கிடைத்துவிடும் பக்கு பக்கு!
சிகரட்பிடிப்பதை நாகரீகம் என்கிறாய்
இதற்காக பின்னால் தொங்குகிறாய்!
உள்ளிழுத்து வெளி விட்டாய் புகை
அதுவே உன் நுரையீரலுக்கு பகை!
பில்ரர் உள்ளது அடித்தால் பாதுகாப்பு என்பாய்
பின்னர் பில்ரரையே தம்மாக அடிப்பாய்!
வளையம் வளையமாக விடுவதில் நீ குரு
இதனால் மாறுவது உன் உரு!
ஆப்பிள் போன்ற உன் கன்னம்
பின்னர் ஆஸ்ரேயாகிப்போன கிண்ணம்!
உனக்கு பிடித்த சிகரட் பில்ரர் கோல்ட்
அது உன் வாழ்வுடன் விளையாடும் பிளேயர்!
உனக்கு செயின்சிமோக்கர் என்று பெருமை
அதுவே உன் மடமை!
சிகரட் பிடிப்பதை நீ நிறுத்தாட்டி
உன்னை பிடித்து விடும் நிக்கட்டின்!
நண்பர் மத்தியில் நீ புகை மன்னன்
உனது குடும்பமே இதனால் புகையுது கண்ணா!
புகை உனக்கு பகை
இதை கூறுபவர்கள் உங்களுக்கு என்றுமே பகை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக