புதன், அக்டோபர் 24, 2007

கமல்ஹாசனின் இறுதி எச்சரிக்கை!!!


எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன் சில வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன், ஆர்குட் டாக்டர் கமல்ஹாசன் கம்யூனிட்டி என்ற அமைப்பும் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.

எனது ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் நற்பணிகளில் ஈடுபடுத்திவரும் முயற்சிகளுக்கு இவர்கள் செயல் ரீதியான விரோதிகளாகின்றனர்.

எனது வெளிவரவிருக்கும் படங்களையோ, எனது வெளிவராத, வந்த படங்களையோ விலை பட்டியலிட்டு விற்கும் (எனது படங்கள் அச்சிட்ட டி.சர்ட் உள்பட) உரிமையை நானோ அல்லது எனது தயாரிப்பாளரோ இவர்களுக்கு வழங்கவில்லை.

அரசியல் மற்றும் வியாபாரத்தை நற்பணி இயக்கத்தில் ஊடுருவ விடாமல், இதுவரை காத்து வருகிறேன். இனியும் இக்காவல் தொடரும்.

எனது அனுமதியின்றி செயல்படும் இவர்களுக்கு எந்த ஒத்துழைப்பையும், நமது நற்பணி இயக்கங்களும், எனது உண்மையான ரசிகர்களும் வழங்கத் தேவையில்லை.

இதுவரை இவர்கள் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களில் என்னுடைய அனுமதியின்றி விற்பனையில் இறங்கிய செயலுக்கு நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தரப்பிடம் விசாரித்தபோது, இப்போதைக்கு இந்த அறிக்கையைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளின்போது செய்தியாளர்களை கமல் சந்திக்கவுள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

- தட்ஸ்தமிழில் இருநு..........

திங்கள், அக்டோபர் 22, 2007

தமிழ் பேசும் ஜேர்மனியர்கள்.

தமிழ் பேசும் ஜேர்மனியர்களை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு கேட்கவும்.


சனி, அக்டோபர் 20, 2007

நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா?: நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரமிருமுறை இதழான நக்கீரனுக்கு (20.10.07) அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

சிங்களத் திரைப்பட விழாவை ராதிகா தொடக்கி வைத்ததும் அங்கு அவர் பேசிய பேச்சுக்களும் தமிழகத்திற்கும் தமிழ் இனத்துக்கும் செய்கிற துரோகம்.

நடிகை ராதிகாவை வாழ வைத்ததும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.

ஏனெனில், நடிகை ராதிகா பாதி சிங்களப் பெண். கலைச்சேவை என்கிற பெயரில் ஊடுருவி நிற்கும் ராதிகா, உண்மையில் கலைச்சேவை செய்யவில்லை. கலையை வர்த்தகமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனது வர்த்தகத்துக்காக தமிழர்களைச் சுரண்டும் ராதிகா, யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் அல்லவா தனது விசுவாசத்தையும் நன்றியையும் அவர் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னை "சிங்களத்தி" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்

ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறார் இல்லத்தின் மீது சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக சிங்கள இராணுவம் குண்டு வீசி 61 தமிழ்ச் சிறார்களை படுகொலை செய்தது. அந்த சின்னஞ் சிறார்களின் உடல்கள் பிய்த்தெறியப்பட்டது. அதைக் கண்டு தமிழகம் மட்டுமல்ல உலகமே கண்ணீர் சிந்தியது.

இது ஏதோ 83-85 களில் நடந்த துயரம் அல்ல. சமீபத்தில் நடந்த துயரம். இந்தத் துயரமெல்லாம் உங்கள் நெஞ்சத்தில் உள்ளதா? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிங்களத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் சிங்களவர்களுக்காக திரைப்படம் எடுப்பேன் என்பதும் ஜீரணிக்க முடியவில்லை.

கலை என்பது மக்களுக்கானது. அந்த வகையில் நாம் சார்ந்து வாழ்கிற மக்களுக்காகத்தான் அந்தக் கலை பயன்பட வேண்டும் என்ற உணர்வு முதலில் ராதிகாவுக்கு வரவேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி.

புதினத்தில் இருந்து...............

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

அமெரிக்காவின் வாரு பாருடா.

அமெரிக்காவின் வாரை பார்க்க, வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்......

சனி, அக்டோபர் 06, 2007

நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு!!!

நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இவர்கள் கூடி தரிசனத்தைக் காண காத்திருந்தனர். அந்த சமயத்தில் சாய்பாபாவும் அங்கு வந்தார். சாய்பாபா உள்பட அனைவரும் நிலவைப் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி எந்த தரிசனமும் காணப்படவில்லை. குறிப்பாக நிலவே வரவில்லை.

இதையடுத்து அனைவரும் ஏமாந்து போனார்கள். அவர்களை ஆறுதல்படுத்துவது போல, இன்னொரு நாள் தரிசனம் தருவதாக கூறி விட்டு சாய்பாபா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
http://thatstamil.oneindia.in/news/2007/10...ar-in-moon.html

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல்!!!

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/10/6/...s_page37806.htm

புதன், அக்டோபர் 03, 2007

முடிந்தால் காப்பாற்றுங்கள்!!!

உங்களால் முடிந்தால் இரட்டை கோபிரங்களை விமானத்தாக்குதலில் இருந்து காப்பாற்றுங்கள்.

காப்பாற்ற இங்கே அழுத்தவும்.
http://www.wahgames.com/play/game/1289/New-York-Defender.html

ஞாயிறு, செப்டம்பர் 30, 2007

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09/29/docs-found-snake-in-woman-intestine.html

சனி, செப்டம்பர் 29, 2007

தினமும் காப்பி குடித்தால்...

தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

வெள்ளி, செப்டம்பர் 28, 2007

'சன்'னை முந்திய 'கலைஞர்'!

திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

கலைஞர் டிவிக்கு 10க்கு 9.35 பாயிண்டுகள் கிடைத்துள்ளன. சன் டிவிக்கு 4.64 புள்ளிகளே கிடைத்ததாம். விஜய் டிவி 3வது இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்த ரேட்டிங் 0.75 ஆகும். ராஜ் டிவி (0.62), ஜெயா டிவி (0.54), கே டிவி (0.35) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சன் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு தமிழ் சானலிடம் முதலிடத்தை இப்போதுதான் பறி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்துள்ள கலைஞர் டிவி போகப் போக சன் டிவியை மேலும் அதிர வைக்கும் எனத் தெரிகிறது.

-தட்ஸ் தமிழ்
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us