தமிழ்நாட்டில் சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா?: நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!
தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரமிருமுறை இதழான நக்கீரனுக்கு (20.10.07) அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
சிங்களத் திரைப்பட விழாவை ராதிகா தொடக்கி வைத்ததும் அங்கு அவர் பேசிய பேச்சுக்களும் தமிழகத்திற்கும் தமிழ் இனத்துக்கும் செய்கிற துரோகம்.
நடிகை ராதிகாவை வாழ வைத்ததும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.
ஏனெனில், நடிகை ராதிகா பாதி சிங்களப் பெண். கலைச்சேவை என்கிற பெயரில் ஊடுருவி நிற்கும் ராதிகா, உண்மையில் கலைச்சேவை செய்யவில்லை. கலையை வர்த்தகமாக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தனது வர்த்தகத்துக்காக தமிழர்களைச் சுரண்டும் ராதிகா, யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் அல்லவா தனது விசுவாசத்தையும் நன்றியையும் அவர் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னை "சிங்களத்தி" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்
ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறார் இல்லத்தின் மீது சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக சிங்கள இராணுவம் குண்டு வீசி 61 தமிழ்ச் சிறார்களை படுகொலை செய்தது. அந்த சின்னஞ் சிறார்களின் உடல்கள் பிய்த்தெறியப்பட்டது. அதைக் கண்டு தமிழகம் மட்டுமல்ல உலகமே கண்ணீர் சிந்தியது.
இது ஏதோ 83-85 களில் நடந்த துயரம் அல்ல. சமீபத்தில் நடந்த துயரம். இந்தத் துயரமெல்லாம் உங்கள் நெஞ்சத்தில் உள்ளதா? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிங்களத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் சிங்களவர்களுக்காக திரைப்படம் எடுப்பேன் என்பதும் ஜீரணிக்க முடியவில்லை.
கலை என்பது மக்களுக்கானது. அந்த வகையில் நாம் சார்ந்து வாழ்கிற மக்களுக்காகத்தான் அந்தக் கலை பயன்பட வேண்டும் என்ற உணர்வு முதலில் ராதிகாவுக்கு வரவேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி.
புதினத்தில் இருந்து...............
2 கருத்துகள்:
இளிச்ச வாயன் த்மிழன்- சொல்லாமல் சொல்கிறார்(சிங்கள) நடிகை ராதிகா.----- கலைஞரால் துரத்தப்பட்ட நடிகை ராதிகா ஒரு விசப் பாம்பு. உழைப்புக்கு தமிழ் நாடு உணர்வுக்கு சிங்கள தேசம்---தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே த்மிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? ---என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகாவை வாழ வைத்ததும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தைக் காட்ட முயற்சிக்கிறார் அந்த வகையில் தனது வர்த்தகத்துக்காக தமிழர்களைச் சுரண்டும் ராதிகா, யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் அல்லவா தனது விசுவாசத்தையும் நன்றியையும் அவர் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னை "சிங்களத்தி" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்இவர்களுக்கு வேறு அரசியல் அந்தஸ்தும் கொடுத்துவிட்டால் த்மிழன் கதி என்னாவது. தமிழர்களே நீங்கள் எப்போது விளித்துக்கொள்வீர்கள். தமிழ் இனம் அத்தனையும் அழிந்தபின்னரா?
thatstamil.com
செல்வி அரசி இப்படி செய்யலாமா?
கருத்துரையிடுக