ஞாயிறு, செப்டம்பர் 30, 2007

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09/29/docs-found-snake-in-woman-intestine.html

5 கருத்துகள்:

krishshankar சொன்னது…

Drink boiled water

பெயரில்லா சொன்னது…

இந்தச் செய்தி டுபாக்கூராக இருக்கும் என நினைக்கிறேன், முஸ்லிம் என்பவரும் இது குறித்து பதிவு இட்டிருந்தார்.ஆனால் கூகுள்ளாண்டவர் இது குறித்து ஏதும் சொல்ல மறுக்கிறார்.நீங்கள் கொடுத்த லிங்கும் வேலை செய்யவில்லை.

பெயரில்லா சொன்னது…

http://message.snopes.com/showthread.php?t=14935

dont fall victim to stupid scam emails! Double check at snopes/popular urban legends web resources.

பிருந்தன் சொன்னது…

இந்தச் செய்தி டுபாக்கூராக இருக்கும் என நினைக்கிறேன், முஸ்லிம் என்பவரும் இது குறித்து பதிவு இட்டிருந்தார்.ஆனால் கூகுள்ளாண்டவர் இது குறித்து ஏதும் சொல்ல மறுக்கிறார்.நீங்கள் கொடுத்த லிங்கும் வேலை செய்யவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2007/09/29/docs-found-snake-in-woman-intestine.html

சரியான லிங் இணைக்கப்பட்டுள்ளது.

பெயரில்லா சொன்னது…

i got this mails even in early 2000. :)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us