செவ்வாய், ஜனவரி 30, 2007

ராமரின் பலம் பாலத்தில் இருக்கா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.

ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணி நிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.

ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.

ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல், கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.

புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாது என பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2007/01/30/sethu.html

2 கருத்துகள்:

Prasram சொன்னது…

இப்பத்தான் 5 நிமிஷத்துக்கு முன்னாடி தினமலர்-ல இதை படிசுட்டு இன்னும் இணையத்துல எந்த விசயமும் வரயேன்னு நினைச்சேன் ... பலம் இருக்கா இல்லையாங்கரது அந்த ராமருக்குத்தான் வெளிச்சம் ...

பெயரில்லா சொன்னது…

ராமரின் பலம் தோள் வலிமையிலா? ராமர் பாலத்திலா? சாலமன் பாப்பையாவுக்கு ஏற்ற தலைப்பு:-))

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us