அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம்.
நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி எடுத்துச் சென்றார்கள்? விடுதலைப் புலிகள் எப்படி வந்தார்கள்? என பல கேள்விகள் எழுகின்றன. விசாரணையும் பலமாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் நம்மைப் பொறுத்த வரையில் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற தி.மு.க. ஆட்சியில் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுப் பிரிவு முற்று லுமாக கெட்டு விட்டது. வெடி பொருட்கள் கட தல் மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஊடுருவல் மட்டு மல்ல, கோடம்பாக்கம் பகுதி யில் ஒருவரது வீட்டில் குண்டு வெடித்திருக்கிறது.
அந்த வீட்டுக்குரியவர் மீது மதுரைத் தேர்தலில் குண்டு வீசிய வழக்கும் இருக்கிறது. இவையெல்லாம் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு உதாரணங்களாக இருக்க முடியாது.
எனது ஆட்சிக் காலத்தில் கோவையில் தீவிரவாதிகள் பிடிபட்டார்கள். அவர்கள மீது கடும் நடவடிக்கை எடுத்தோம். தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தோம். எனது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள், பயங்கர வாதிகள், தீவிரவாதிகள் தமிழ் நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவே அஞ்சினார்கள்.
அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் இருந்து பயங்கர வாதிகளையும் தீவிரவா திகளையும் விரட்டியடித்தோம். காவல்துறை என்பது எனது ஆட்சியில் கட்டுக் கோப்பாக இருந்தது. பயங்கர வாதம், தீவிரவாதம் என் பது கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
இன்று நிலைமை என்னப காவல்துறை என்பது நிலை குலைந்து, ரவுடிகளின் முன்னே கைகட்டி நிற்கிறது. பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். விடுத லைப்புலிகள் மீண்டும் ஊடு ருவி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். மக்கள் இந்த சூழ் நிலையை கவலையுடன் கவ னிக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர், சீருடை தைத்துக் கொடுத்த ஒருவர், இன்று மத்திய அமைச்சராகவே ஆகிவிட்ட பின் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கத் தான் செய்யும்.
மக்களை காக்க வேண்டிய அரசு, பயங்கர வாதிகளையும், தீவிரவாதிகளையும், ரவுடி களையும் பாதுகாப்பது தான் இன்றைய ஆட்சியின் அவலம். மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
நன்றி>maalaimalar.com
9 கருத்துகள்:
test
//விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர், சீருடை தைத்துக் கொடுத்த ஒருவர், இன்று மத்திய அமைச்சராகவே ஆகிவிட்ட பின் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கத் தான் செய்யும்.//
கள்ளத்தோனி மாமே கூடவே இருக்க சொல்ல இப்டில்லாம் எப்டி அறிக்க வுட அறிவு வர்துன்னு எனுக்கு தெர்லபா...
unga karuththa sollave illa!!!!!
சின்னத்தம்பி அம்மா ருசிகண்ட பூனையப்பா, சட்டம் ஒழுங்கை சொல்லி, ஏற்கனவே ஒருதடவை ராஜீவிடம் சொல்லி, சந்திர சேகரை கொண்டு கலைச்சவர்.
ஆனால் ஜயா இப்ப உசாரு, ஜயா வெளிப்படையா பேசாம இருக்க இதுதான் காரணம், மத்திய அரசின் கொள்கைதான் எனது கொள்கை, என்னும் வார்த்தையே அவரது உசார் தனத்தை காட்டுதில்லையா?
அட அரசியல்வாதிக எல்லாம் சினிமா காரங்க மாதிரி. மார்க்கட்டு (ஹி!) சரிஞ்சதும் எதனாச்சும் இப்பிடி செஞ்சி மக்க நம்மள மறந்துட கூடாதுன்னு ஏதாச்சும் பொசுக்குனு ஒரு ரீலு உட்டுனே இருப்பாங்க!
அய்யாவை கவுக்க அம்மா காத்திருந்தாக, அம்மா நினைச்சா உறுமீன் என்று, அய்யா விலாங்கு மீன் என நிரூபிச்சிட்டாக:-)
இந்த அய்யாவுக்கும் அம்மாவுக்கும் நாக்களா கிடச்சம் அரசியல் நாடாத்தா? தயவு செய்து எங்க பிணங்களின் மேல் அரசியல் நடத்தாதீங்க, நாங்க ஏற்கனவே ரொம்பக் கஸ்டப் பட்டனாங்க.
காம இன்பத்தின் தேர்ந்த நுணுக்கங்கள் பட்டை தீட்டியதால் வந்த வாழ்வு அல்லவா இந்த அதிகாரம்,
மானத்தையே வாழ்வாய்க் கொண்டதமிழனின் முதுகில் அவமானம் செய்யும் சவாரி அல்லவா அந்த ஆட்சி.
"காம இன்பத்தின் தேர்ந்த நுணுக்கங்கள் பட்டை தீட்டியதால் வந்த வாழ்வு அல்லவா இந்த அதிகாரம்,
மானத்தையே வாழ்வாய்க் கொண்டதமிழனின் முதுகில் அவமானம் செய்யும் சவாரி அல்லவா அந்த ஆட்சி,"
எல்லோரும் தமது உடல் உழைப்பால்தான் முன்னுக்கு வந்து ஆட்சியை பிடித்தார்கள், அதேபோல்தான் ஜெயலலிதாவும் தனது உடல் உழைப்பால் முன்னுக்கு வந்து ஆட்சியை பிடித்தார் இதில் என்ன தவறி?
கருத்துரையிடுக