சனி, அக்டோபர் 06, 2007

நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு!!!

நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இவர்கள் கூடி தரிசனத்தைக் காண காத்திருந்தனர். அந்த சமயத்தில் சாய்பாபாவும் அங்கு வந்தார். சாய்பாபா உள்பட அனைவரும் நிலவைப் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி எந்த தரிசனமும் காணப்படவில்லை. குறிப்பாக நிலவே வரவில்லை.

இதையடுத்து அனைவரும் ஏமாந்து போனார்கள். அவர்களை ஆறுதல்படுத்துவது போல, இன்னொரு நாள் தரிசனம் தருவதாக கூறி விட்டு சாய்பாபா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
http://thatstamil.oneindia.in/news/2007/10...ar-in-moon.html

6 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

உலகெங்கும் பல நன்கு படித்தவர்கள் சாயி பாபா பக்தர்களாக பஜனைக் கூட்டங்கள் பண வசூல் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அவரது நல்ல பேச்சுக்களையும் கருத்துக்களை மற்றும் பரப்பி வருகின்றனர்.
அவருடைய அசிங்கங்கள்,ஏமாற்றுக்களைப் பார்க்க மறுக்கின்றனர்.

இது மக்களை ஏமாற்றுவதல்லவா என்று சிந்திக்க வேண்டாமா?

பெயரில்லா சொன்னது…

இந்தப் ஃபிராடு பயலை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து (முதல்) பொண்டாட்டியை விட்டு காலில் விழ வைத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் தற்போது பகுத்தறிவுக்கு நானே அத்தாரிட்டி எனக் கூறிக் கொள்ளும் ஒரு தமிழகத் தலைவர். என்னே பெரியாருடைய பகுத்தறிவுக்கு வந்த சோதனை!

பெயரில்லா சொன்னது…

இதை எதிர்த்து கலைஞர் நிச்சயம் அறிக்கை விட வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

நிலவில் 'களங்கம்' இருப்பதால், தூய்மையான சத்திய சாய்பாபா தனது 'தோன்றும்' முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டாரோ ? :)

G.Ragavan சொன்னது…

சாய்பாபா என்ன... எங்க பக்கத்து வீட்டு பாட்டி கூடத்தான் நெலாவுல தெரியுறாங்க. அவங்க நெலாவுல வடையே சுட்டிருக்காங்க. வெறும் தரிசனம் தர்ரது எந்த மூலைக்கு. ஆனானப்பட்ட கடவுள் சூரியன்ல காட்சி குடுத்தா நல்லாயிருக்கும்.

நீதிதேவன் சொன்னது…

அவுஸ்த்திரேலியாவில் இருந்து 2000 சாயி பக்தர்கள், என் அக்கா உட்பட அங்குள்ளார்கள் கடந்த இரணடு வாரங்களாக, அவர்களிடம் தொடர்புகொண்டு இதைப்பற்றி கேட்டபோது, இந்திய நாஸ்திகர்கள் இப்படித்தான் கதைப்பார்கள், இதுகளின் பேச்சைக்கேட்கும் நேரத்தில் போய் ஏதாவது நாய் எச்சம் மக்கள் நடைபயிலும் இடங்களில் இருந்தால் அப்புறப்படுத்தி ஒரு சமூக சேவையைச்செய், அது இந்த உலகத்திற்கு நன்மைபயக்கும் என்று சொல்லியது எனக்கு ஒரு மாதிரிப்போய்விட்டது. நாஸ்திகர்கள் என்றால் அப்படி மூளயில்லாது கதை திரிப்பவர்களா...பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆன்மீக பாசறை...அவுஸ்திரேலியா...தமிழர் பூங்கா.புளொக்ஸ்பொட்.கம்

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us