வெள்ளி, ஜூன் 15, 2007
'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி!!!
ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்.... கீழே விழும். ஆனால் ரஜினி சுண்டிவிட்டால் மட்டும் கோடி கோடியாய் பணம் கிடைக்கும். 'சிவாஜி'யில் ஷங்கர் காட்டியிருக்கும் மேஜிக் இதுதான்.
சாப்ட்வேர் துறையில் சம்பாதித்த 200 கோடி ரூபாயுடன் தாய்நாட்டுக்கு வந்திறங்கும் ரஜினி, இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவி ஏழைகளுக்கு உதவ எண்ணுகிறார். இதற்காக இத்துறையில் அனுபவமுள்ள சுமனின் உதவியை கேட்கிறார்.
உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில் விஷத்தையும் வைத்திருக்கும் சுமனோ ரஜினியின் திட்டம் தனது பிழைப்பில் மண்ணை போட்டுவிடும் என்பதால் அவரை கவிழ்க்க சகுணி வேலைகளில் ஈடுபடுகிறார். சுமனின் நயவஞ்சக புத்தியை புரிந்துகொள்ளும் ரஜினி, சுமனின் மிரட்டலுக்கு அடிபணியாமல் சொந்த முயற்சியால் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார்.
வில்லன் சுமன் சும்மா இருந்துவிடுவாரா? தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆப்பு மேல் ஆப்பு வைக்க ஆடிப்போகிறார் ரஜினி. சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கையில் ஒற்றை ரூபாயுடன் தெருவில் நிற்கும் ரஜினி 'இதைவைத்தே சாதித்து காட்டுகிறேன்...' என்று நாணயத்தை சுண்டிவிட இடைவேளை.
அதன்பிறகு பிறகு ரஜினி போராடுவார், வில்லன் சுமனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவார், கடைசியில் ஜெயிப்பார் என்ற வழக்கமான சினிமா பார்முலாவுக்கு உத்திரவாதம் தருகிறது படம்.
எடுத்தவுடனேயே முகத்தை காட்டிவிடக்கூடாது என்னும் ஹீரோயிச பில்டப்புடனேயே இதிலும் காட்டப்படுகிறார் ரஜினி. மேக்கப்மேனின் உபயத்தில் ரஜினியிடம் பத்துவருடத்திற்கு முந்திய இளமை. ரம்யாகிருஷ்ணன் பாணியில் சொல்லப்போனால் 'வயசானலும் ஸ்டைலும் அழகும் ரஜினியைவிட்டு இன்னும் போகல...'
சுமனின் சதியால் ஓட்டாண்டியாகி திரும்புவதிலிருந்து ரஜினியின் நடிப்பும் வேகமும் ரசிகர்களுக்கு தீனிபோடுகிறது. டீக்கடை பெஞ்சில் சுமனை உட்கார வைத்து பேசுவது, கறுப்புபணத்தை வெள்ளையாக்கி வெளிநாட்டிலிருந்து மொட்டை கெட்டப்பில் திரும்புவது, ஸ்ரேயா வீட்டில் மிளகாய் தின்றுவிட்டு காரம் தாங்காமல் கத்துவது என நிறைய இடங்களில் ரசிக்கவைக்கிறார். காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகள் இல்லாத ரஜினியை பார்ப்பது ஆறுதல்.
ரஜினியை தன்பின்னால் சுற்ற வைக்கும் அழகு மலராக ஸ்ரேயா. கணவனின் (சிவாஜி) உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்று துடிக்கும் காட்சியில் மட்டும் முகம் காட்டுகிறது நடிப்பு. மற்ற இடங்களில் காட்டுகிறார் இடுப்பு.
ரஜினியின் மாமனாக விவேக். காமெடி செய்வதாக நினைத்து கடுப்பேற்றுகிறார். குண்டு பெண்மணியை பார்த்து 'பங்களா வருது பார்...' என்பதும் அமைச்சரின் பி.ஏ. வாக வருபவரிடம் 'மனைவின் ரேட்' என்ன என்பதுமாக சுஜாதாவின் இரண்டாம் தர எழுத்துகளை டப்பிங் செய்திருக்கிறார்.
சுஜாதாவின் எழுத்தென்னும் போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சாகிற நாள் தெரிந்சிடுச்சுன்னா வாழுற நாளெல்லாம் நரகமாயிடும்' இந்த வசனம் மட்டுமே சுஜாதாவின் ஆளுமையை காட்டுகிறது.
ரொம்ப நாளைக்கு பிறகு வில்லனாக தரிசனம் தரும் சுமனின் நடிப்பும் பிரமாதம் என்ற வகையறாவில் சேர்க்கமுடியாது. தமிழ்சினிமா வில்லன்களின் தலையெழுத்தே சுமனிடமும் எழுதப்பட்டுள்ளது. ரஜினி 200 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும்போது அவரை ஆட்டிவைக்கும் சுமனின் பலம், ரஜினி சாதாரண ஆளாகி எதிர்க்கும்போது பவர் கட்டாவது ஏனோ?
கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் செய்திருக்கும் செலவு பளிச்சிடுகிறதே தவிர பாராட்டும்படியான தனித்துவம் தென்படவில்லை. டிரைவின் தியேட்டரில் சண்டை காட்சி, பிரம்மாண்ட செட்டில் பாடல்களை படம்பிடித்த இடங்களில் உழைப்பு தெரிகிறது.
ரஜினி, நயன்தாரா ஆடும் பாடல்காட்சியின் பின்னணியில் தொழில்நுட்ப உதவியுடன் செயற்கை பசுமையை காட்டுவது ரசிக்கும்படி இல்லை.
'சஹாணா சாரலில்....'செவிகளை இனிக்க வைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையில் தன் மீதான கவனத்தை திருப்பியதாக தெரியவில்லை.
'இலவச கல்வி, இலவச மருத்துவத்துடன், கறுப்பு பணமில்லாத தேசமே நாட்டின் வளத்தை மேம்படுத்தும்.' படத்தில் ஷங்கர் சொல்லவரும் கருத்து இதுதான். படம் பார்ப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற இயக்குனரின் எண்ணம் வரவேற்கக் கூடியதே. ஆனால் அதனை சொல்ல வேண்டிய விதத்திலிருந்து விலகிப்போய் வேறொரு தடத்தில் பயணிப்பதால் சொல்லவரும் கருத்தின் உருவம் மங்கி ரஜினி என்ற நடிகர் என்ன செய்திருக்கிறார் என்ற மாய பிம்பமே மனதில் வேரூன்றுகிறது.
வில்லனால் ரஜினி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயிலேயே ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளும், காமெடிகளும் கதையின் சீரியஸை அனாதையாக்கி விடுகிறது.
"பகட்டு இல்லாத பாசாங்கு செய்யாத சினிமா எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் சில சூழல்கள் என்னை பிரம்மாண்டத்திற்குள் தள்ளிவிட்டது," என்பது போன்ற கருத்துடன் பேட்டிகளில் தனது ஆசையை சொல்லியிருக்கும் ஷங்கர், தொடர்ந்து அந்த பள்ளத்துக்குள் பதுங்கியிருக்கவேண்டாம் என்பதுதான் நமது ஆசையும்.
'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி சினி சவுத்தில் இருந்து.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
8 கருத்துகள்:
ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்.... கீழே விழும்.
பஞ் சூப்பர்:-) ரசித்தேன்.
திரைப் படத்தைப் பற்றிய உங்கள் பார்வையையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
if u r bold aprove mt comennt...mudikitu velaya paruda...rajini veriyan
சுப்பர் ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை.
கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.
இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.
இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி வெளிவந்த சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான் ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது சிவாஜிராவ் நம்ம பையன் அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள் அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.
லூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடா
//லூஸாடா நீ பொரம்போக்கு மொதல்ல படத்த பாருடா லவடா //
டேய் நீ தமிழனுக்கு பொறந்தியா இல்ல கன்னடத்தானுக்கு பொறந்தியா?.
மன்னிக்கவும்,
அப்படி பார்த்தால் ரஜினி கன்னடம் அல்ல. மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.
என்னைப் பொருத்த வரை, அவர் நிலைமையை நன்கு உணர்ந்தவர். நினைந்திருந்தால், எப்பொழுதே அரசியலுக்கு வந்திருக்கலாமே! எல்லாவற்றிற்கும் மேலாக இது சினிமா தானே, தமிழ்ப்படத்தில் தமிழ் மண்ணில் பிறந்தவர்தான் நடிக்க வேண்டுமென்றால், அது நல்லதன்று.
பின் எப்படி இந்தியாவின் கனவுகன்னி என்றழைக்கப்பட்ட ஹேமாமாலினி,போன்றோர் ஹிந்திப் படத்தை ஆண்டனர். ஆரம்ப காலத்தில் இல்லாத எதிர்ப்பு திடீரென்று முளைத்தது எப்படி??
//எம்ஜிஆர் அவர்கள் நடித்த காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது...... தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். //
இதுக்குத்தான் வாத்தியார் ரஜினியை தோட்டத்துல வைத்து துவைத்து காயப் போட்டாரே (லதாவை டாவடிச்சதுக்கும் சேர்த்து குடுத்தாரே )
கருத்துரையிடுக